தமிழ்நாடு அரசு தொழில் முதலீட்டு, ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறையின் சிப்காட் மற்றும் டிட்கோநிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப் பணிகளை இன்று (04.06.2023) தலைமைச்செயலாளர் முனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னை வர்த்தக மைய விரிவாக்கம்:முதலாவதாக, சென்னை மாவட்டம், ஆலந்தூர் வட்டம், நந்தம்பாக்கத்தில் டிட்கோ நிறுவனம் மூலம்மேற்கொள்ளப்படும் சென்னை வர்த்தக மைய விரிவாக்கப் பணிகளை ஆய்வு செய்தார். இவ்விரிவாக்கத்திட்டத்தில் 9,00,000 சதுரஅடி பரப்பளவில் ரூ. 309 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும், 4000 நபர்கள் அமரக்கூடிய மாநாட்டு அரங்கம் மற்றும் 5 பொருட்காட்சி அரங்கங்கள், பன்னடுக்கு வாகனநிறுத்தம் (Multi Level Car Parking) ஆகியவற்றின் கட்டுமானப்பணிகளை பார்வையிட்டார். இக்கட்டுமானப் பணிகளை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுவதற்கு முன்னர் முழுவதுமாகமுடிக்கப்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
ஒருங்கிணைந்த பணியாளர் தங்கும் விடுதி. சிப்காட் வல்லம் வடகால்: அடுத்ததாக, சிப்காட் நிறுவனம் மூலம் காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம் வடகாலில், ரூபாய் 680 கோடிமதிப்பீட்டில் 18,720 தொழிலாளர்கள், பணிபுரியும் தொழிற்சாலைகளின் அருகாமையில் தங்கும்வகையில் கட்டப்பட்டுவரும் ஒருங்கிணைந்த பணியாளர் விடுதியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பணியாளர் விடுதியின் கட்டுமானப் பணிகள் மற்றும் சாலை வசதி, குடிநீர் வசதி, விளையாட்டுஅரங்கம், கழிவு நீர் சுத்திகரிப்பு, மழைநீர் சேகரிப்பு, சூரிய சக்தியின் மூலம் மின் உற்பத்தி போன்றபல்வேறு வசதிகள் ஏற்படுத்துதல் தொடர்பாகவும் ஆய்வு செய்தார். இப்பணிகளை குறித்த காலத்திற்குள்கட்டி முடிக்குமாறு அறிவுறுத்தினார்.
சிப்காட் தொழில் புத்தாக்க மையம் (ஃபோர்ட்): திருப்பெரும்புதூர் சிப்காட் தொழில் பூங்காவை பார்வையிட்ட பின் காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர், மாம்பாக்கத்தில், ரூபாய் 16.45 கோடியில் தொழில் தொடங்குவோர் மற்றும்கண்டுப்பிடிப்பாளர்கள் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ள சிப்காட் தொழில்புத்தாக்க மையத்தை (ஃபோர்ட்), ஆய்வு மேற்கொண்டார். இம்மையத்தில் அமைக்கப்பட்டுள்ள உடன்பணிபுரியும் இடம் (co-working space), தொழில் 4.0 உபகரணங்கள், தயாரிப்புகள் மேம்பாட்டு மையம், முன்மாதிரி தயாரிப்பு வசதி (proto typing facilitation) மற்றும் பயிற்சி மையம் போன்ற பல்வேறுவசதிகள் குறித்து ஆய்வு செய்து சிறந்த முறையில் பராமரிக்க கேட்டுக்கொண்டார்.
டைடல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா, பட்டாபிராம்: இறுதியாக, திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம் பட்டாபிராமில் டிட்கோ நிறுவனம் மூலம் ரூ.327 கோடிமதிப்பீட்டில் 5,62,000 சதுரஅடியில் கட்டப்பட்டு வரும் டைடல் தொழில்நுட்பப் பூங்காவை (TIDEL PARK) தலைமைச் செயலாளர் அவர்கள் ஆய்வு செய்தார். இப்பூங்காவில் கட்டப்பட்டுவரும் தகவல்தொழில்நுட்பப் பூங்கா, 2 உணவக கட்டிடம் (Food Court) ஆகிய கட்டுமான பணிகளைப் பார்வையிட்டுஇப்பணிகளை துரிதமாக முடிக்குமாறு அறிவுறுத்தினார்.
இவ்வாய்வின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் திரு.ச.கிருஷ்ணன், இ.ஆ.ப., டிட்கோ மேலாண்மை இயக்குநர் திருமதி ஜெயஸ்ரீ முரளிதரன், இ.ஆ.ப., சிப்காட் மேலாண்மை இயக்குநர் திருமதி எ.சுந்தரவல்லி, இ.ஆ.ப., டைடல் பூங்காமேலாண்மை இயக்குநர் திருமதி மரியம் பல்லவி பல்தேவ் இ.ஆ.ப., சிப்காட் செயல் இயக்குநர் திருநிஷாந்த் கிருஷ்ணா இ.ஆ.ப,. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.