நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாவட்ட வாரியாக கணக்கெடுப்பு செய்து அறிக்கை சமர்ப்பிப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு. இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கணக்கெடுப்பு செய்வது தொடர்பாகதலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் திரு. வெ. இறையன்பு. ..., அவர்கள் தலைமையில் இன்று(02.12.2021) துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆகியோருடன் ஆய்வுக் கூட்டம்நடைபெற்றது. இக்கூட்டத்தில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர். சந்தீப் சக்சேனா. ..., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. சிவதாஸ் மீனா. ..., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் திரு. குமார் ஜெயந்த். ..., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் திருமதி. பி. அமுதா. ..., சுற்றுச்சூழல்,காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் திருமதி. சுப்ரியா சாகு. ..., வீட்டு வசதிமற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் ஹித்தேஷ் குமார் மக்வானா. ..., சட்டத்துறைசெயலாளர் (சட்ட விவகாரங்கள்) திரு. பி. கார்த்திகேயன் பல்வேறு துறை இயக்குநர்கள் மற்றும் அலுவலர்கள்னைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் (காணொலிக்காட்சி) வாயிலாக கலந்து கொண்டனர்.

சென்னை அருகில் உள்ள சிட்லபாக்கத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பானநீதிப்பேராணை எண். 10666 / 2019 வழக்கு தொடர்பாக அரசு தலைமைச் செயலாளர் 02.11.2021 மற்றும்24.11.2021 ஆகிய நாட்களில் மேற்காணும் அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆய்வு கூட்டம்நடத்தி பின்னர் 01.12.2021 அன்று அரசு தலைமைச் செயலாளர் சார்பாக நீர்வளத் துறை அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் அவர்களால் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மேற்காணும் வழக்கு மற்றும் பல்வேறு மாவட்டங்களில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள்தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு முன்பாக நேற்று (01.12.201) 11 வழக்குகள்விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. வ்வழக்குகளுடன் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளைஅகற்றுதல் தொடர்பாக நீதிபேராணை (MD) எண். 22163 / 2019ல் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை28.01.2019 அன்று பிறப்பித்த உத்தரவு தொடர்பான வழக்கும் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னைஉயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட மேற்காணும் நீதிப்பேராணை வழக்கில் நீதிமன்ற உத்தரவுபிறப்பிக்கப்பட்டு இரண்டரை ஆண்டுகள் கடந்தும் நீதிமன்ற ஆணையின் மீது எவ்வித நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை என கருத்து தெரிவித்த முதன்மை அமர்வு னைத்து மாவட்டங்களிலும் நீர்நிலைகளில்உள்ள ஆக்கிரமிப்புகளைக் கண்டறிந்து அவற்றின் விவரத்தை ஒரு வாரக் காலத்திற்குள் தலைமைச் செயலாளர்அறிக்கையாக அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் இன்று நீர்வளத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சுற்றுச்சூழல், காலநிலைமாற்றம் மற்றும் வனத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, சட்டத்துறை,  இத்துறைகளின்இயக்குநர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆகியோருடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் வருவாய்த் துறை ஆவணங்களின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நீர்நிலைகளின் விவரங்கள், அவற்றில்ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள விவரங்கள் ஆகியவற்றை கணக்கெடுப்பு செய்து விரிவான அறிக்கையைஅனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் நீர்வளத்துறை வழங்கியுள்ள படிவங்கள் I, II,  மற்றும் IIIல் பூர்த்திசெய்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் அவர்களுக்கு 4.12.2021க்குள் அனுப்பிவைக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் அறிவுறுத்தினார். மேலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் பற்றாளராகச் செயல்பட்டு மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து அறிக்கைகளை பெற்றுநீதிமன்றத்தில் 07.12.2021-க்குள் அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தினார்.

மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இதில் எவ்வித சுணக்கமும் காட்டாமல் இரவு பகலாக கணக்கெடுப்புகளைநடத்தி தெளிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் அவர்கள் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன:-

மாவட்ட வருவாய் அலுவலர்கள், உதவி இயக்குநர்கள் (நிலஅளவை), உதவி இயக்குநர்கள் (ஊராட்சி), மாநகராட்சி / நகராட்சி ஆணையர்கள், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்கள் மற்றும் நீர்வளத் துறை செயற்பொறியாளர்கள் ஆகியோரை ஒருங்கினணத்து வருவாய் துறை ஆவணங்களின் படி  ீர்நிலைகளில் உள்ளஆக்கிரமிப்பு குறித்த விவரங்களை சேகரித்து தொகுத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறைமுதன்மைச் செயலாளர் அவர்களுக்கு 04.12.2021 அனுப்புமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அறிக்கை அனுப்பவேண்டும்.

மாவட்ட ஆட்சியர்கள் நீர்நிலைகளின் வரைபடங்களை தயார் செய்து ஆக்கிரமிப்புகளின் விவரங்களைபடிவம் I, II,  மற்றும் III –ல் 04.12.2021-க்குள் அனுப்ப வேண்டும்.

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிய விவரம் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றநீதிமன்றங்கள் பிறப்பித்த தடையாணை குறித்த விவரங்களை மாவட்ட ஆட்சியர்கள் தங்களது அறிக்கைகளில்அளிக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியர்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று குடியிருப்பு வழங்குவது குறித்த பட்டியலைஅளிக்க வேண்டும்.