‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்திற்கு கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாராட்டு

இசக்கி துரை தயாரிப்பில், வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்யாதும் ஊரே யாவரும் கேளிர்‘. சென்னையில் நடைபெற்ற சிறப்பு காட்சியில்யாதும் ஊரே யாவரும் கேளிர்திரைப்படத்தை மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் நல்லகண்ணு மகேந்திரன்,  மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி ஆகியோர்,  நடிகர் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து படம் பார்த்தார்கள். அப்போதுயாதும் ஊரே யாவரும் கேளிர்திரைப்படத்தை அவர்கள் பெரிதும் பாராட்டினர். யாதும் ஊரே யாவரும் கேளிர்திரைப்படத்தின் டிரைலர் ஏற்கனவே பெரும் வரவேற்பு பெற்றுள்ளநிலையில், திரைப்படம் மே 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.