‘காதல் தேசம்” படத்தை தெலுங்கில் மறுமதிப்பு செய்த கே.டி. குஞ்சுமோன்

தமிழ் சினிமாவில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து புதிய இயக்குனர்களை வைத்து பிரம்மாண்ட படங்களாக  தயாரித்தவர் ஜென்டில்மேன்கே.டி. குஞ்சுமோன்இவர் தயாரித்த சூரியன், ஜென்டில்மேன், காதலன், காதல் தேசம் போன்ற பல படங்கள் வினியோகஸ்தர்களுக்கு வசூல் சாதனை படைத்த படங்களாகும். கே.டி.கே தயாரித்தகாதல்தேசம்படத்தை முதல் கட்டமாக தெலுங்கில் வெளியிட்டுள்ளார். இளைஞர்களை காதலில் கிரங்கடித்த இந்த படத்தை இசை நேர்த்தியுடன் புதிய கலர் சேர்ப்பில் தெலுங்கில்  பிரேமதேசம் என்ற பெயரில் புத்தம் புது காப்பியாக வெளியாகியுள்ளது.  ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 200- க்கும் அதிகமான திரை அரங்குகளில் செய்யபட்டு சாதனைபடத்துள்ளார்.**********

வினீத், அப்பாஸ், தபு ஆகியோர் நடித்து கதிர் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்துக்கு இசை புயல் .ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். ரஹ்மானின் இசை பயணத்தில் காதல் தேசம் திருப்பு முனையாகஅமைந்தது . படத்தின் பாடல்கள் உலகம் முழுவதும் பட்டி தொட்டி எங்கும் முணு முணுக்கப்பட்டு பிரபலமடைந்தது. இதில் வரும் *முஸ்தஃபா முஸ்தஃபா* பாடல் தலைமுறைகளை தாண்டி இன்றும் பிரபலம். சமீபத்தில் மறைந்த பிரபல டைரக்டர் கே.வி.ஆனந்த் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமான படமும் இதுவே.

1996-ல்  இப்படம் வெளியிட்டபோது  ஆந்திரா  மற்றும் கர்நாடகாவில் ஒரு வருடங்களுக்கு மேல்திரையிடப்பட்டு  வசூலில் சாதனை படைத்ததுஆர்ட் டைரக்டர் தோட்டா தரணியின் கைவண்ணத்தில் படத்துக்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்டஅரங்கங்களும் மக்களை வியப்படைய வைத்ததுசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாபா மற்றும் பல படங்கள்  மீண்டும் வெளியிட இருக்கும் வேளையில்.. அப்படங்களுக்கு முன்னோடியாகபிரேம தேசம்படத்தை  வெளியிட்டு மீண்டும் தன்னை முதன்மைதயாரிப்பாளராக அடையாளப் படுத்தியுள்ளார் கே.டி. குஞ்சுமோன்.  இவர் அடுத்து தயாரித்து வரும்ஜென்டில்மேன்2″ படத்தின் படப்பிடிப்புக்கான வேலைகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.