பாலஸ்தீனத்தின் மீது பயங்கரவாத தாக்குதலைக் கட்டவிழ்த்துவிடும் இஸ்ரேலைக் கண்டித்து சென்னைதங்கசாலை மணிக்கூண்டு அருகில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் மாபெரும் கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1947க்கு முன்பாக ஒற்றை தேசமாக இருந்த பாலஸ்தீனத்தைத் துண்டாடி அபகரித்த இஸ்ரேல், மிச்சமீதியிருக்கும் பாலஸ்தீனத்தையும் முழுவதுமாக கைப்பற்றிடத் துடிக்கும் பாசிசப் போக்கை கடைப்பிடித்துவருகின்றது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேல் தொடர்ந்து பாலஸ்தீனத்தை தாக்கிகொண்டிருக்கிறது. 2014 காசாவிலும் மேற்குக் கரையிலும் நடைபெற்ற தாக்குதலில் சுமார் 2700 அப்பாவிபாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். அதில் பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர்.
2021ம் ஆண்டும் இதே நிலைதான் 200க்கும் மேற்பட்ட சிறார்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள்சபையின் மனித உரிமை ஆணையம் இஸ்ரேல் மீது குற்றம் சுமத்தியிருந்தாலும், அதைப்பற்றி கிஞ்சித்தும்கவலைப்படாமல் தொடர்ச்சியாகப் பாலஸ்தீன மக்களை நெதன்யாகு அரசு கொன்று குவித்து வருகிறது.
கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் இஸ்ரேலிய யூத ஆக்கிரமிப்பாளர்கள் இஸ்ரேலிய இராணுவத்தின்துணையுடன் 250க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். தங்களின்வீடுகளையும், உடைமைகளையும் விட்டுவிட்டு உயிரைக் காத்துக் கொள்வதற்காக அகதிகளாக தங்கள்நாட்டிற்குள் ஓடி ஒளிந்து கொள்ளும் நிலையில் பாலஸ்தீன மக்கள் இருக்கிறார்கள்.
1967-ல் இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளுக்கிடையிலான யுத்தத்திற்கு பிறகு சுமார் 45 இலட்சம் மக்கள்தொகை கொண்ட ஃபாலஸ்தீனம் காஸா, மேற்கு காரை, சாக்கடல் பகுதிகளாக உடைக்கப்பட்ட நிலையில்காஸா உலகில் அதிகம் மக்கள் நெருக்கடி கொண்ட நகரமாக இருக்கிறது.
எகிப்திலிருந்து காஸா பகுதி வழியாகக் கொண்டு வரப்படும் உணவு மற்றும் மருந்து பொருட்களைக் கூட கடந்தஒன்பது மாதங்களாக நெதன்யாகு அரசு தடுத்து வைத்திருப்பதன் காரணமாக காஸாவில் ஃபாலஸ்தீன மக்கள்பெரும் துயரத்திற்கு ஆளான சூழலில்தான், இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தம் உச்சத்தை தொட்டிருக்கிறது.
ஃபாலஸ்தீன், ஃபாலஸ்தீனியர்களுக்கே சொந்தம் என்கிற மகாத்மா காந்தியின் முடிவுக்கு ஏற்ப 2013ம் ஆண்டுவரை பாலஸ்தீனம் ஆதரவு என்கிற கொள்கை முடிவில் உறுதியாக இருந்த இந்தியா 2014ம் ஆண்டு முதல்இஸ்ரேல் ஆதரவு என்கிற நிலைப்பாட்டை ஏன் எடுக்க வேண்டும்?
இஸ்ரேலை ஆதரிப்பது இந்திய அரசுக்கு நியாயம் என்றால் ரஷ்யா – உக்ரைன் சண்டையிலும் நடுநிலைநிலைப்பாட்டில் உறுதியாக நின்ற மர்மம் என்ன? சுதந்திர பாலஸ்தீனத்தை அங்கீகரித்த அரபு நாடுகள் அல்லாதமுதல் நாடு இந்தியா.
முழுமையான சுதந்திர பாலஸ்தீனம் மலர்வதற்கு ஒரு மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியா தன்பங்களிப்பைச் செய்வதற்கு முன்வர வேண்டும் என்றும் கேட்டு கொள்கிறோம்.
தங்களின் நிலங்கள் முழுமையாக மீட்கப்பட வேண்டும் சுதந்திர ஃபாலஸ்தீனம் மலர வேண்டுமென தங்களின்மண்ணிற்காகப் போராடும் போராட்டக் குழுவினரைப் பயங்கரவாதிகள் என ஒரு சில ஊடகங்கள் அழைப்பதைதவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தமுமுக தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்ற தமுமுக பொதுச்செயலாளர் பேரா.ஜெ.ஹாஜாகனி, மமக பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது எம்.எல்.ஏ, தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் குணங்குடி ஆர்.எம்.அனிபா, தமுமுக துணைத் தலைவர் பி.எஸ்.ஹமீது, மாநிலச் செயலாளர்முஹம்மது முஸ்தபா, தலைமை நிலையச் செயலாளர் வழ. எம்.ஜைய்னுல் ஆபீதின், அமைப்புச் செயலாளர்கள்புழல் சேக் முஹம்மது, அலி, மாயவரம் அமீன், தலைமை பிரதிநிதிகள் வெங்கலம் ஜபருல்லாஹ், கே.அப்துல்சலாம், தமுமுக வடசென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் அப்துல் சமது, வடசென்னை மேற்கு மாவட்டத்தலைவர் குணங்குடி முஹம்மது மொய்தீன், மத்திய வடக்கு மாவட்டத் தலைவர் எல். தாஹா நவீன், தென்சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் அபுபக்கர் கோரி, தென்சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர்பனையூர் யூசுப் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டனக் கோஷங்களைஎழுப்பினர்.
இப்படிக்கு
எம்.எம்.முஸ்தபா
மாநில செயலாளர்