மனிதநேய மக்கள் கட்சியின் 17 ம் ஆண்டு தொடக்க விழா

சென்னை தலைமையகத்தில் மமக 17 ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கட்சி கொடியேற்றி  ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா மனிதநேய மக்கள் கட்சியின் 17 ம் ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு சென்னை தலைமையகத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் கொடியேற்றம் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி மாநில செயலாளர் சிவகாசி முஸ்தபா தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ அவர்கள் கலந்துகொண்டு மனிதநேய மக்கள் கட்சியின் கழகக் கொடியை ஏற்றி வைத்து மற்றும் ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.  இந் நிகழ்ச்சியில் தலைமை நிர்வாக குழு உறுப்பினர் குணங்குடி ஆர்.எம்.அனீஃபா,   மாநில அமைப்பு செயலாளர்கள், புதுமடம் ஹலீம் பழனி ஃபாருக், தலைமை பிரதிநிதிகள் அப்துல் சலாம்,அபிராமம் அப்துல் காதர், சிராஜ்,  தைமியா மத்திய சென்னை வடக்கு மாவட்ட தலைவர் தாஹா நவீன், மத்திய சென்னை தெற்கு மாவட்டத் தலைவர் ரசூல் மற்றும் மாநில, மாவட்ட, பகுதி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.