தமிழ்நாட்டில் 500  மதுக்கடைகளை   உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவு : மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு

தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப்படும் என சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள். அதன் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் 500 மதுக்கடைகளைக் கண்டறிந்து அதனை மூட அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணையின் அடிப்படையில் 500 மதுக்கடைகளை மூடி தமிழ்நாடு அரசு உத்தரவு வெளியிட்டுள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. இதற்கு வழிவகுத்த மாண்புமிகு முதலமைச்சருக்குத் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறதுதற்போது மூடப்பட்டுள்ள 500 மதுக்கடைகள் மட்டுமின்றி தமிழகம் மதுவில்லா மாநிலமாகத் திகழ தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மதுக்கடைகள்  மூடப்படும் பகுதிகளில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்பட்டால் அந்த விற்பனையை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.