தமுமுக பொதுச் செயலாளர் பேரா.முனைவர் ஜெ.ஹாஜாகனி வெளியிடும் அறிக்கை:
ஒன்றிய அரசின் பாடநூல் நிறுவனமான தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) அங்கீகரித்துள்ள பாடநூல்கள் பல பிஞ்சு மனங்களில் மதவெறி நஞ்சைக் கலக்கும் வகையில் அமைந்துள்ளன. அதற்கு ஓர் அசைக்க முடியாத ஆதாரமாக இரண்டாம் வகுப்பு பாடநூலில் இடம்பெற்றுள்ள பாடம் ஒன்று அமைந்துள்ளது. சமூக அறிவியல் நூலின் 70வது பக்கத்தில், இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகள் குறித்து குழந்தைகளுக்கு விளக்கம் தரும் வகையில் அமைந்துள்ளது. இதில் ஈதுல் ஃபித்ர் என்ற தலைப்பில், “ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு நோற்று ஈதுல் ஃபித்ர் கொண்டாடுவார்கள். ஒருவருக்கொருவர் வாழ்த்து கூறி தழுவிக் கொள்வார்கள். ‘செவைன்’ என்று இனிப்பு பதார்த்தத்தை எல்லோரும் உண்பார்கள்” என்று எழுதப்பட்டுள்ளது.
அப்படி ஒரு பதார்த்தம் உள்ளதா? இந்தியா முழுதும் முஸ்லிம்கள் அதை உண்பார்களா என்பதையெல்லாம் அறிந்து எழுதியிருக்க வேண்டும். சரி அதையாவது அவர்களது அலட்சியம் என்று கடந்து போகலாம். கணேஷ் சதுர்த்தி என்ற தலைப்பில் எழுதும்போது, “கடவுள் கணேசனின் பிறந்த நாளை நாம் இப்பண்டிகையில் கொண்டாடுகிறோம். வீடுகள் கணேஷ் சிலைகள் வைக்கப்பட்டு பிறகு நீர் நிலைகளில் கரைக்கப்படும். கடவுள் கணேஷுக்கு ‘மோடக்’ என்ற இனிப்பு பதார்த்தம் செய்து வழங்கப்படும் என்று எழுதப்பட்டுள்ளது. முஸ்லிம் பண்டிகை குறித்து எழுதும்போது ‘அவர்கள்’ என்றும், விநாயக சதுர்த்தி குறித்து எழுதும்போது ‘நாம்’ என்றும் ஒரு பாடப்புத்தகமே பிஞ்சு நெஞ்சில் பதிவு செய்வது பாடநூல் பயங்கரவாதமே (Text Book Terrorism) அன்றி வேறில்லை. இதற்கு தமுமுக வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறது. இந்தப் பாடமும் இதுபோல இந்திய மக்களிடையே சாதி, மத அடிப்படையில் பிரிவினையைத் தூண்டும் பாடங்களும் உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.