தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை விதிக்க முடியாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: தமிழக மக்களின் உணர்வுகளுக்கு கிடைத்த வெற்றி – ஜவாஹிருல்லாஹ்

தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டுவிளையாட்டு போட்டிக்கு தடை விதிக்க முடியாது என இன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பளித்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தீர்ப்பை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. இந்த தீர்ப்பு தமிழக மக்களின்உணர்வுகளுக்கு கிடைத்த வெற்றியாகவே மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது. தமிழினத்தின் உரிமைக்காக லட்சக்கணக்கான இளைஞர்கள் மிகுந்த கட்டுப்பாட்டோடும், கண்ணியத்தோடும், கடமை உணர்வோடும் அகிம்சை வழியில் போராடியதின் காரணமாகவே இந்தபிரச்சினை உச்ச நீதிமன்றம் வரை சென்று இன்று தீர்ப்பு வெளியாகி உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் அடித்தளமான வேற்றுமையில் ஒற்றுமையை பேண வேண்டும் என்பதைசிதைக்கும் வகையில்  ஜல்லிக்கட்டு போன்ற தமிழர் கலாச்சாரத்திற்கு எதிர்ப்பு போன்ற ஒற்றைப்பண்பாட்டை திணிக்க திட்டமிட்ட முயற்சிகள் இந்த தீர்ப்பின் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது.

பீட்டா அமைப்பு, விலங்குகளில் நலனில் அக்கறை உள்ள அமைப்பாக வெளியில் சொல்லிக்கொண்டிருந்தாலும் பல்வேறு நாடுகளின் பல விலங்குகளை கொன்று குவித்துள்ள அமைப்புஅது என்பதையும், தமிழர்கள் உணர்ந்துள்ளார்கள். பல நாடுகளில் பீட்டாவின் செயற்பாட்டாளர்கள்விலங்குகளைக் கொன்று குவித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்றம் வரை சென்று தமிழக அரசு சார்பில் சிறப்பாக வாதாடிய வழக்கறிஞர்களுக்கும் இதற்குமுழு ஒத்துழைப்பாக இருந்த தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின்சார்பில் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.