தீர்மானம் 1 தேசிய அளவிலான சமூக நீதி தேவை. விடுதலை பெற்ற இந்தியாவில் நாட்டின் விடுதலைக்காக இணையில்லா தியாகங்கள் செய்துள்ள முஸ்லிம்சமுதாயம் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் அதிகாரம் ஆகியவற்றில் காலங்காலமாகவஞ்சிக்கப்பட்டு வருகிறது.
ஆங்கிலேயே ஆட்சியில் முஸ்லிம்களின் அவலமான அதிகாரப் பிரதிநிதித்துவம் குறித்த ஹண்ட்டர் அறிக்கை தொடங்கி விடுதலை பெற்ற இந்தியாவில் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் எழுதிய கடிதம், கோபால் சிங் ஆணையப் பரிந்துரை, ஐக்கியமுற்போக்கு கூட்டணி அரசு அமைத்த நீதி அரசர் ராஜேந்திர சச்சார் உயர்நிலைக் குழு அறிக்கைஉள்ளிட்ட பல அதிகாரப்பூர்வ ஆவணங்கள் முஸ்லிம்களின் அவலம் நிறைந்த சூழலையும்முஸ்லிம்களுக்கு சமூகநீதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்துள்ள அவலத்தையும் துல்லியமாகக்காட்டுகிறது. இதற்கு தீர்வாக நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் வழங்கிய பரிந்துரைகள்அமைந்துள்ளன.
தேசிய அளவில் சிறுபான்மையினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 15 விழுக்காடு இடஒதுக்கீடுவழங்கப்பட வேண்டும், அதில் 10 விழுக்காடு முஸ்லிம் சமுதாயத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்றபரிந்துரையும் அளித்துள்ளது, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்ற சட்டத்தின் மூலம் சமூகநீதியை சிதைத்துள்ள ஒன்றிய பாஜக அரசு, மிகவும் நீதியானநேர்மையான காலத்தின் கட்டாயமான நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் அனைத்துபரிந்துரைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 2 தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு தேவை
இந்தியாவில் உள்ள அனைத்து சமூகங்களும் சமூக நீதி பெற சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புமிகவும் அவசியமாகும். அவ்வாறு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் நெடுங்காலமாக தொடர்ந்துவரும் சூழ்ச்சி மிக்க சமூக அநீதிகள் வெளிச்சத்திற்கு வரும் வாய்ப்பு உள்ளது. எனவே ஒன்றிய பாஜக அரசுதேசிய அளவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திட உடனே உத்தரவிட வேண்டும் என்றுஇம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 3 பொது சிவில் சட்டம் எனும் பூச்சாண்டியை ஒழிக்க வேண்டும்
ஒரு மதம், ஒரு மொழி, ஒரு நாடு என்ற இந்தியாவுக்கு ஒவ்வாத கோட்பாட்டை மதவாத பாசிசம் மூலம்அரங்கேற்ற நினைக்கும் சங் பரிவாரங்கள் அவ்வப்போது பொது சிவில் சட்டம் என்ற பூச்சாண்டியைக்காட்டி சிறுபான்மையின மக்களை பதற்றப்படுத்தி வருகின்றது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டுவந்து ஒட்டுமொத்த தேசத்தையும் பதற்றத்தில் ஆழ்த்தி அதன் மூலம் தங்கள் அரசின் தவறுகளை பாஜகஅரசு மூடி மறைத்தது. தற்போது பொது சிவில் சட்டம் என்ற பூச்சாண்டியை பயன்படுத்தி தனதுபிழைகளை மறைத்து வருகிறது. இந்திய அரசியல் சாசனம் அனைத்து குடிமக்களுக்கும் சமய சுதந்திரத்தை வழங்கி இருக்கிறது. அதனைபின்பற்றி வாழ குடிமையியல் சட்டங்கள் வழி வகுக்கின்றன. இதை சிதைக்க நினைக்கும் மதவாதபாசிசவாதிகள் பொது சிவில் சட்டம் என மிரட்டி வருகின்றனர். இதனை ஒன்றிய பாஜக அரசு உடனடியாககைவிட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 4 உயர் சாதி இட ஒதுக்கீடு ஒழிக்கப்பட வேண்டும்
சமூக நீதிக் கோட்பாட்டின் மீது விழுந்த மரண அடியாக உயர் சாதிகளுக்கான இட ஒதுக்கீடுஇருக்கின்றது. சமூக நீதி என்பது ஏழ்மை ஒழிப்பு திட்டமல்ல அதிலும் உயர்சாதி ஏழைகளுக்கு மட்டும் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது அப்பட்டமான, அராஜகமான சமூக அநீதி என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம். அரசியல் சாசனத்துக்கு எதிரான இந்த உயர்சாதி ஏழைகளுக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீட்டை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 5 தமிழகத்தில் 3.5% இட ஒதுக்கீடு: வேண்டும் வெள்ளை அறிக்கை
முத்தமிழறிஞர் கலைஞரின் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு கல்விமற்றும் வேலைவாய்ப்புகளில் 3.5 விழுக்காடு தனி இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இந்த தனிஇடஒதுக்கீட்டின் பலன் கடந்த 10 ஆண்டுகளில் முஸ்லிம் சமூகத்தில் முறையாக கடைபிடிக்கவில்லை. பல துறைகளில் முஸ்லிம் சமுதாயம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. எனவே கடந்த 10 ஆண்டுகளில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 3.5 விழுக்காடு இடஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்றும் அதில்காணப்படும் பின்னடைவு பணியிடங்களை முஸ்லிம் சமுதாயத்திற்கு வழங்கி சமூகநீதியை நிலைநாட்டிடவேண்டும் என தமிழ்நாட்டு அரசை இந்த மாநாடு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. தமிழ்நாட்டில்பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு 6 விழுக்காடாக உயர்த்தப்பட வேண்டுமெனஇம்மாநாடு தமிழ்நாட்டு அரசை கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 6 மதுவில்லா தமிழ்நாடு மலரட்டும்
மது விற்பனை அரசுக்கு தருகின்ற வருமானம் அதிகம், ஆனால் அது தருகின்ற அவமானம் அதைவிடஅதிகம் என்பதை உரிமையோடும், கவலையோடும் இம்மாநாடு தமிழ்நாடு அரசிற்குதெரிவித்துக்கொள்கிறது. ஒருபுறம் கள்ளச்சாராய சாவுகள் நம்மை கவலை அளிக்க செய்கிறது எனில் மறுபுறம் அரசே மதுவைவிற்கும் கொடிய சூழல். டாஸ்மாக்கை உருவாக்கியது அதிமுக அரசு என்றாலும் அதற்கு மூடு விழா கண்டஅரசாக திராவிட மாடல் திமுக அரசு திகழ வேண்டும். அரசின் வருவாய்க்கு மாற்று வழிகள்கண்டறியப்பட்டு டாஸ்மாக் மது விற்பனை படிப்படியாக முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் எனஇம்மாநாடு வலியுறுத்துகிறது. கஞ்சா, அபின், ஹெராயின் என போதையின் அனைத்து வடிவங்களையும் அறவே ஒழித்த மாநிலமாகதமிழ்நாடு திகழ்ந்திட ஆவன செய்திட வேண்டுமென தமிழ்நாடு அரசை இந்த மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 7 நீண்ட கால சிறைவாசிகளின் விடுதலை உடனடி தேவை
தமிழக சிறைகளில் பத்தாண்டுகளுக்கும் மேலாக வாடிவரும் சிறைவாசிகள் முன் விடுதலைக்காக நீண்டநெடிய போராட்டங்களை நடத்தி வருகின்றோம். கடந்த காலங்களில் சிறைவாசிகள் முன்விடுதலைநிகழ்ந்தபோதெல்லாம் முஸ்லிம் சிறைவாசிகள் மட்டும் விடுவிக்கப்படாமல் கொடுமையாகவஞ்சிக்கப்பட்டனர். 20 ஆண்டுகளைக் கடந்து சிறை கொட்டடியில் கிடக்கும் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு நீதிமறுக்கப்பட்டது. இந்த அவலங்களை களைய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சிறைநிரப்பும்போராட்டம், மண்டல மாநாடுகள் உள்ளிட்ட நீண்ட நெடிய களப் போராட்டங்களை நடந்து வந்தது. இந்த நியாயமான கோரிக்கை ஏற்று திமுக தேர்தல் வாக்குறுதியில் இதை உறுதிப்படுத்தியதோடுநீதியரசர் ஆதிநாதன் ஆணையம் அமைக்கப்பட்டு பரிந்துரைகளையும் பெற்றது. முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலை இனியும் தாமதிக்கப்படாமல் விரைந்து அவர்கள் விடுதலைசெய்யப்பட வேண்டும் என்றும் இதற்காக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்றும்இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 8 ஒன்றிய பாஜக அரசு நிறுத்தியுள்ள கல்வி உதவித் தொகைகளை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் ஒன்றிய பாஜக அரசு நிறுத்தியுள்ள கல்வி உதவித் தொகைகளை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். ஆரம்பக் கல்வியில் பெரிதும் பின்தங்கியுள்ள முஸ்லிம் சமுதாய பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காககாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு கல்விஉதவித்தொகை வழங்கியது.இது சிறுபான்மையின முஸ்லிம் மாணவர்கள் ஆரம்பக் கல்வி முடிக்க பெரும் உதவியாக இருந்ததுமதவெறி பிடித்த பாஜகவின் ஒன்றிய அரசு ஈவு இரக்கமின்றி இந்த உதவி தொகையை கடந்த ஆண்டுதிடீரென நிறுத்தியது. அதானி, அம்பானிகளின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்நாட்டின் வளங்களைகாவு கொடுக்கும் ஒன்றிய பாஜக அரசு, ஏழை எளிய முஸ்லிம் குழந்தைகள் மீது வன்மம் கொண்டு இந்தகல்வி உதவித் தொகையை நிறுத்தியது. ஒன்றிய அரசின் இந்த மதவாத நடவடிக்கையை வன்மையாக கண்டித்த தமிழ்நாடு முதலமைச்சர்மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், “ஒன்றிய அரசு இந்த உதவித்தொகைகளைமீண்டும் வழங்க வேண்டும் இல்லையேல் தமிழ்நாடு அரசு இதை வழங்கும்” என்று தன்மானத்தோடுஅறிவித்தார். அதற்கு இந்த மாநாடு பெருமிதத்தோடு நன்றி தெரிவிப்பதோடு ஒன்றிய பா.ஜ.க அரசு நிறுத்தி உள்ளசிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைகளை தமிழ்நாடு அரசு இந்த கல்வியாண்டுமுதல் வழங்க ஆவன செய்ய வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 9 சமூக நீதியை வலுப்படுத்தும் முதலமைச்சருக்கு பாராட்டுக்கள்
எதிர்கட்சிகளின் ஒற்றுமையின்மையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அதிகாரத்தைகைப்பற்றும் பாஜக சமூகநீதியை அழிக்கும் வேலைகளில் மிக நுட்பமாகவும், தீவிரமாகவும் ஈடுபட்டுவருவதை துல்லியமாக உணர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்அவர்கள் தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான வலிமைமிக்க கூட்டணியை உருவாக்க எடுத்து வரும்முயற்சிகளை இம்மாநாடு மனமார பாராட்டுகிறது. குறிப்பாக அகில இந்திய அளவிலான சமூக நீதிக்கான கூட்டமைப்பை உருவாக்கி இந்தியா முழுவதும்உள்ள தலைவர்களை ஒருங்கிணைத்து தமிழ்நாடு முதலமைச்சர் நடத்திய மாநாடு பெரும் நம்பிக்கையைவிதைக்கும் வகையில் அமைந்துள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் சமூகநீதியை முன்னிறுத்திகளம்காண வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 10 கர்நாடக மக்களுக்கு பாராட்டு
அண்மையில் நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாசிச பாஜகவுக்கு மரணஅடி கொடுத்து பலதொகுதிகளில் கட்டுத் தொகையை இழக்கும் வகையில் படுதோல்வியை பரிசளித்து, மக்கள் ஒற்றுமையைமுன்னிறுத்திய காங்கிரஸுக்கு மகத்தான வெற்றியை தந்த கர்நாடக மக்களை இம்மாநாடு மனம் திறந்துபாராட்டுகிறது. திருமதி சோனியா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இளம் தலைவர்ராகுல் காந்தி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா, துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார்ஆகியோருக்கு இம்மாநாடு மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. கர்நாடகத்தில்பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 4 விழுக்காடு இட ஒதுக்கீடு தடையில்லாமல் தொடரபுதிய கர்நாடக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 11 தமிழகம் எங்கும் பள்ளிவாசல் தேவாலயங்கள் கட்ட அனுமதி
தமிழ்நாட்டில் சிறுபான்மை முஸ்லிம் மற்றும் கிறிஸ்த்தவ வழிபாட்டுத்தலங்கள் சொந்த இடத்தில்கட்டுவதற்கு உள்ள முட்டுக்கட்டைகளை நீக்கி குறுகிய காலத்திற்குள் அவை கட்டுவதற்கான நிலையானவிழிகாட்டும் வழிமுறைகளை வகுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இம்மாநாடுகோருகின்றது.
தீர்மானம் 12 சென்னை அண்ணா சாலை மத்ரசே ஆசம்
சென்னை ராயப்பேட்டை வையிட்ஸ் சாலையில் 150 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் அரசினர்ஹாபர்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சிறுபாண்மை மாணவிகளுக்கான கல்லூரி நிறுவதமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 13 சென்னை வையிட்ஸ் சாலை ஹாபர்ட் பள்ளிக் கூட வளாகத்தில் பெண்கள் கல்லூரி
சென்னை ராயப்பேட்டை வையிட்ஸ் சாலையில் 150 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் அரசினர்ஹாபர்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சிறுபாண்மை மாணவிகளுக்கான கல்லூரி நிறுவதமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 14 ஆதனூர் ஊராட்சி
காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூர் ஊராட்சி லட்சுமிபுரம் பகுதியில் வசித்து வரும் ஏழை எளிய மக்களின்வாழ்விடத்தை அகற்ற துடிக்கும் அசோக் லைலாண்ட் நிறுவனத்தை வன்மையாக கண்டிப்பதோடு மாவட்டநிர்வாகம் அங்கு நெடுங்காலமாக குடியிருக்கும் மக்களுக்கு உரிய முறையில் குடிமனை பட்டா வழங்கவேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 15 வல்லாஞ்சேரி
செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு தாலுகா வல்லாஞ்சேரி, சர்வே எண் 110/3 உள்ள 200 குடும்பங்கள் சுமார் 50 ஆண்டு காலமாக வசித்து வரக்கூடிய சூழலில் அந்த மக்களைவெளியேற்றக்கூடிய முயற்சியை தடுத்து நிறுத்தி அந்த பகுதி மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கஇம்மாநாடு அரசை கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 16 இஸ்லாத்தை தழுவும் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலினத்தினர்
தமிழ்நாட்டில் இஸ்லாத்தை ஏற்கும் பட்டியலினத்தினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முற்பட்டோராகவே கருதப்படுகின்றார். இந்த சமூக அநீதியை நீக்கும்வகையில் இஸ்லாத்தை தழுவும் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களை பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் எனவகைப்படுத்தி தமிழ்நாடு அரசு உரிய ஆணை பிறப்பிக்க வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
இப்படிக்கு மனிதநேய மக்கள் கட்சி சென்னை மண்டலம்