நாடுகள் கடந்த நாவின் சுவை ,சுவையின் இலக்கணத்தை மாற்றும் ஒரு மாறுபட்ட சமையல் நிகழ்ச்சி “சுற்றுலா சமையல்”ஜெயா தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் மதியம் 1:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது. தமிழகத்தின் தொன்மையையும் அதன் உள்ள சிறப்புகளையும் எடுத்துரைத்து, தமிழகத்தின் சுவையான சைவ அசைவ மற்றும் பாரம்பரிய உணவு வகைகளை செய்முறையுடன் நம் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் எடுத்துறைக்கிறார் மலேசிய நெறியாளர் விஜயா ராணி.
அதே போல் மலேசிய மக்களின் பல்சுவை உணவு வகைகளை செய்முறையுடன் மலேசிய மண்ணில், அதன் சுற்றுலாவையும் எடுத்துரைக்கும் வகையில் தமிழக நெறியாளர் மேகா ராஜன் நெறிப்படுத்துகிறார்.இந்நிகழ்ச்சி இந்திய மற்றும் மலேசியா மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.