எஸ்.ஜெகநாதன் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். தமிழகத்தின் பாரம்பரியத்தை நமது நாட்டுப்புற பாடல்கள் எடுத்து செல்கின்றன. அதில் பரவை முனியம்மா, தேக்கம்பட்டி சுந்தர்ராஜன், புஷ்பவனம் குப்புசாமி, டாக்டர் கே.ஏ. குணசேகரன், கோட்டைச்சாமி, ஆறுமுகம், கரிசல் கருணாநிதி, மதுரை சந்திரன், கர்ணன் புகழ் கிடாக்குழி மாரியம்மாள் என 200 நாட்டுப்புற பாடகர்கள் பாடியுள்ளனர். அந்த பாடல்களில் இருந்து 15 பாடல்கள் தேர்வு செய்து, அதை டப்பாங்குத்து என்ற படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.*******
பாரதிராஜாவின் தெற்கத்தி பொண்ணு புகழ் சங்கர பாண்டி கதாநாயகனாக் நடிக்க, தீப்தி, துர்கா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மதுரை வீதியில் நடக்கும் கிராமிய கலை வடிவமான தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வில் நடக்கும்சமபவத்தை வைத்து கதை, வசனம், திரைக்கதை எழுதியுள்ளார் S.T.குணசேகரன். கிராமிய கலையின் நுட்பத்தை ஆய்வு செய்து அதை இயக்கியுள்ளார் ஆர்.முத்துவீரா.
தாயை காணாமல் தவிக்கும் ஒரு பெண்ணின் உள் உணர்வுகளை பிரதிபலிக்கும் கதை டப்பாங்குத்து. தெருக்கூத்தை 1000க்கணக்கான பேர் விடிய, விடிய நின்று ரசிப்பதால், அதில் விறுவிறுப்பான ஆட்டம், பாட்டம், நகைச்சுவை என ஜனரஞ்சகம் நிறைந்திருக்கும். அதே வேகத்தை திரைப்படத்தில் இசைஅமைப்பாளர் சரவணன் தந்துள்ளார். அதிவிரைவில் திரைக்கு வர இருக்கும் இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு : ராஜா, கே.பக்தவத்சலம், நடனம் : தீனா, கலை : எம். சிவாயாதவ், படத்தொகுப்பு : டி.எஸ்.லக்ஷ்மணன், மக்கள் தொடர்பு : எஸ்.செல்வரகு, சண்டைபயிற்சி : ஆக்சன் பிரகாஷ், நாதன் லீ, ஸ்டில்ஸ் : வின்சென்ட், தயாரிப்பு நிர்வாகம் : சின்னமணி மக்கள் தொடர்பு: செல்வரகு