JITO- (Jain International Trade Organization) அமைப்பினர் ஆண்டு தோறும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகைகளை வழங்கி வருகின்றனர். இந்தாண்டு தமிழ்நாட்டைச்சேர்ந்த 350 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகைகளை வழங்க முன்வந்துள்ளனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., 27.8.2020 அன்று காலை, காவல் ஆணையரக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து
கொண்டு 6 மாணவ, மாணவிகளுக்கு மேற்படி JITO அமைப்பின் நிர்வாகிகள் முன்னிலையில் கல்வி உதவி தொகைகளை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் சென்னை பெருநகர் காவலில் பணிபுரிந்து, பணியின் போது உயிரிழந்த காவல் ஆளிநர்கள் குடும்பத்தின் குழந்தைகள் மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிர் நீத்த காவல் ஆளிநர்களின் குழந்தைகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரியின் முழு ஆண்டுகளுக்கும் உண்டான அனைத்து செலவுகளையும் செய்வதாக ஏற்பளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) A.அமல் ராஜ், இ.கா.ப., இணை ஆணையாளர் S.மல்லிகா, இ.கா.ப, துணை ஆணையாளர்கள் R.திருநாவுக் கரசு, இ.கா.ப., (நுண்ணறிவுப்பிரிவு), .பெரோஸ்கான் அப்துல்லா, இ.கா.ப., (நிர்வாகம்), S.விமலா, (தலைமையிடம்), P.சாமிநாதன், (நவீன காவல் கட்டுப்பாட்டு அறை) JITO – Chennai Chapter தலை மைச் செயலாளர் நிமிஷ் டோலியா, துணைத் தலைவர் தர்மேந்திரகுமார் ஜெயின், அமைப்பாளர் அஸ்வின் ரத்தோட் மற்றும் மேற்படி அமைப்பின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.