பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த ‘சார்பட்டா பரம்பரை‘ படத்தில் வேம்புலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஜான் கொக்கேன். இப்படத்தை தொடர்ந்து அஜித் நடித்த ’துணிவு’ படத்தில் வில்லனாகநடித்தார். மேலும் தமிழில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜான் கொக்கேன், தற்போதுபாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார்.*********
ப்ரைடே ஸ்டோரி டெல்லர்ஸ் (Friday story tellers) தயாரிப்பில் இயக்குனர் பாவ் துலியா இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய வெப் சீரியஸ் தி ப்ரிலான்சர். (The Freelancer). கிரியேட்டிவ் ஹெட்டாக நீரஜ் பாண்டேபணியாற்றும் இந்த வெப் தொடர், ஒரு புனைக்கதை மற்றும் “எ டிக்கெட் டு சிரியா” புத்தகத்தைஅடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகிறது. இதில் ஜான் கொக்கேன் உளவுத்துறை அதிகாரியாகநடிக்கிறார். விடாமுயற்சியுடன், உண்மையைக் கண்டறியவும், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக்கண்டறியும் அதிகாரியாக இவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வெப் தொடரில் தென்னிந்தியநடிகர்களில் ஜான் கொக்கேன் மட்டுமே தேர்வாகி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
*இது குறித்து ஜான் கொக்கேன் கூறுகையில்* துணிவு’ படப்பிடிப்பில் நான் பாலிவுட்டில் நடிப்பேன் என்று அஜித்குமார் சார் கணித்திருந்தார். அவர்சொன்னது போலவே இந்த இந்தி வெப் சீரிஸில் துணிவு முடிந்த உடனேயே கையெழுத்திட்டேன். அவர்கூறியது போல நடந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அனுபம் கெர் போன்ற மூத்த பாலிவுட்நடிகர்களுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் காம்பினேஷன் காட்சிகளும் இருக்கு. இது ஒருநேர்மறையான பாத்திரம் மற்றும் வெப் சீரியஸ்யில் ஒரு முக்கிய பாத்திரம் என்று கூறினார்.