பொழுதுபோக்கு திரைப்படம் ‘சார்லஸ் எண்டர்பிரைசஸ்’

ஜாய் மூவி புரொடஷன்ஸ் தயாரிப்பில் சுபாஷ் லலிதா சுப்பிரமணியன் இயக்கத்தில் ஊர்வசி, கலையரசன், பாலு வர்கீஸ்,  குருசோமசுந்தரம் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்சார்லஸ் எண்டர் பிரைசஸ்‘. பாலுவர்கீசுக்கு மாலையில் கண் தெரியாது. இதனால் அவரின் திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை. ஒருதொழில் தொடங்க வங்கியிடம் கடன் கேட்கிறார். வங்கிக்கடனும் கிடைக்கவில்லை. அவரது அம்மாஊர்வசியிடம் அவரது பரம்பரைக்கு சொந்தமான சோழர் காலத்து பிள்ளையார் சிலை ஒன்று இருக்கிறது. அந்த பிள்ளையார் சிலையை பாலுவர்கீஸ் ஊர்வசிக்கு தெரியாமல் திருடி விற்க முயல்கிறார். அவருக்குஉதவுகிறார் திருடனான கலையரசன். இதுதான்கதை. இதை வைத்து ஒன்றரை மணி நேரத்தைஓட்டியிருக்கிறார் இயக்குநர் சுபாஷ் லலிதா சுப்பிரமணியன். கடவுளை நம்பியவர்கள் கைவிடப்படமாட்டார்கள் என்ற தத்துவத்தை புதிய முறையில் சொல்லியிருக்கிறார்கள். திறமையான நடிப்பில் ஊர்வசிஉச்சத்தை தொட்டிருக்கிறார். கேரளாவை சேர்ந்த கதாநாயகன் பாலு வர்க்கீஸ், தமிழ் திரையுலகில்வலம்வர வாய்ப்பு இருக்கிறது. கலையரசன் படத்தின் ஓட்டத்திற்கு கைகொடுக்கிறார். குருசோமசுந்தரத்திற்கு சொல்லிக்கொள்ளும்படியான வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை.