ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் பெண்மையின் பெருமையை எடுத்துரைக்கும் திரைப்படமாக ‘கயல்‘ ஆனந்தி நடிப்பில் ‘மங்கை‘ உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தின் பதாகை எனப்படும் முதல் பார்வையை இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் வெளியிட்டனர். “ஒரு பெண்ணின் பயணத்தை மையமாகக்கொண்டு உருவாகி வரும் ‘மங்கை‘ திரைப்படத்தில் இதுவரை ஏற்றிராத பாத்திரத்தில் கதையின் நாயகியாக ஆனந்தி நடிக்கிறார். துஷி, ராம்ஸ், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.*******
சசிகுமார் இயக்கத்தில் உருவான ‘ஈசன்‘ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடந்துள்ள துஷி, தயாரிப்பாளரும்தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து முத்திரை பதித்து வருபவருமானஜெயப்பிரகாஷின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
‘மங்கை‘ திரைப்படம் பெண்ணை பற்றிய ஆணின் பார்வையை பேசும் விதமாகவும் ஒரு பயணத்தில் பெண்சந்திக்கும் நிகழ்வுகளை சொல்லும் விதமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவின்மூணாறு, பூப்பாறை, தமிழ்நாட்டின் தேனி, கம்பம், கூடலூர், லோயர் கேம்ப் மற்றும் சென்னையில்நடைபெற்றுள்ளது,” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “‘மங்கை‘ திரைப்படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது. ஒவ்வொரு காட்சியும்ரசிகர்களை படத்தோடு ஒன்ற வைக்கும் என நம்புகிறேன்,” என்று தெரிவித்தார். பல்வேறு தமிழ் மற்றும்தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி இயக்குநர்களோடு இணை இயக்குநராகவும் வசனகர்த்தாகவும்குபேந்திரன் காமாட்சி பணியாற்றியுள்ளார்.
ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் ‘கயல்‘ ஆனந்திநடிக்கும் ‘மங்கை‘ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ள நிலையில் இப்படத்தின் இசையைபிப்ரவரியிலும் திரைப்படத்தை மார்ச் மாதத்திலும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.