ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர், பிரகாஷ்ராஜ் நடித்திருக்கும் “தேவரா” செப்.27ல் வெளியீட்ய்

ஜூனியர் என்.டி.ஆர்., ஜான்வி கபூர், பிரகாஷ்ராஜ், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘தேவரா’ திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பான் இந்தியா படமாக செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது.  இப்படத்தின் அறிமுக நிகழ்வில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். பேசும்போது,“சென்னையில்தான் நான் குச்சுப்புடி கற்றுக் கொண்டேன் என்பது பலருக்கும் தெரியாது. ’தேவரா’ எந்தளவுக்கு எனக்கு முக்கியம் என்பதை வார்த்தையில் விவரிக்க முடியாது. படம் சிறப்பாக வர உழைத்த படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. எனக்கு மட்டுமல்ல, உங்கள் எல்லோருக்கும் இந்தப் படம் சிறப்பானதாக அமையும். திரையரங்கில் நிச்சயம் பாருங்கள். ஜான்வியின் சிறப்பான நடிப்பு உங்களுக்குப் பிடிக்கும். தமிழ் இயக்குநர்களில் வெற்றிமாறன் சாருடன் ஒரு படம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது” என்றார்.