கே.செந்தில்வேலன் தயாரிப்பில் குணசுப்பிரமணியம் இயக்கத்தில் நட்டி நட்ராஜ், நிஷாந் ரூசோ, நிழல்கள் ரவி, ஜீவா ரவி, ஆதேஸ் பாலா, பாடினிக் குமார், ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “சீசா”. படத்தின் ஆரம்பத்தில் ஒரு பங்களாவின் வீட்டு வாசலில் அப்பங்களாவின் வேலைக்காரர் குத்தி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடக்கிறார். அந்த வீட்டில் வாழ்ந்த கணவன் நிஷாந் ரூசோ, மனைவி பாடினிக் குமார் இருவரும் வீட்டினுள் இல்லை. மறைக்காணிக் காட்சிப்பதிவு வன்தட்டும் (சிசிடிவி காட்டிஸ்க்) களவு போயிருக்கிறது. வேலைக்காரரை யார் எதற்காக கொலை செய்தார்கள்?. வீட்டில் வாழ்ந்த கணவன் மனைவி நிஷாத் ரூசோ, பாடினிக் குமார் எங்கே போனார்கள்?. இந்த மர்மத்தை எவ்வாறு காவல்த்துறை ஆய்வாளர் நட்டி நட்ராஜ் கண்டுபிடிகிறார்? என்பதுதான் கதை. நட்டி நட்ராஜ் உருவத்திலும் நடிப்பிலும் மெருகேறியிருக்கிறார். ஒவ்வொரு அதிர்வான திருப்புமுனை காட்சிகளையும் அமைதியாகவும் அசால்ட்டாகவும் கையாண்டு தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். நிசாந் ரூசோ மனநலம் பாதிக்கப்பட்டவராக நடிக்கும்போது கடின உழைப்பை கையாண்டிருக்கிறார். குடும்ப தலைவியாக குத்த்குவிளக்காக காட்சியளிக்கிறார் பாடினிக் குமார். காதல் காட்சிகளில் நளினத்தை மென்மையாக வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்கிறார். ஒரு துப்பறியும் நாவலாக திரைக்கதையை அமைத்து பாரவையாளர்களை நாற்காலியில் கட்டிப்போட்டுவிட்டார் இயக்குநர் குணசுப்பிரமணியம். படம் விறுவிறுப்பாகவும் அடுத்த காட்சியை ஆவலுடன் எதிபார்க்கும் விதமாகவும் அமைந்திருக்கிறது. இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.
மதிப்பீடு 5க்கு 3.5.