தமிழ் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் இந்திய திரைப்பட கூட்டமைப்பு தலைவராக தேர்ந்தெடுத்த பிறகு நடந்த முதல் நேர் காணல் கூட்டம் அண்மையில் மும்பை அந்தேரியிலுள்ள தி கிளப்பில் நடந்தது . மத்திய அரசு அறிவித்த (Cinematograph Act amendment ) ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா பற்றியும் திரை துறை சார்ந்த பல விஷயங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாத்திக்க பட்டது . ( Cinematograph act amendment ) ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா குறித்து மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அவர்களை விரைவில் சந்தித்து பேச இருப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . இந்த நிகழ்சியில் FFI தலைவர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் ரூபாய் 15 லட்சத்திற்கு வரைவோலை (DD ) கொடுத்தார் . இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் ஹீரசன்த் , ( SIFCC ) ரவி கொட்டரக்கரா , C . கல்யாண் , TP அகர்வால் , காற்றகட்ட பிரசாத் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர் .
மக்கள் தொடர்பு: ரியாஸ் அகமது.