பிரபுதேவாவை வைத்து இவர் இயக்கிய ‘குலேபகவாலி’ ஜோதிகா வைத்து இயக்கிய ‘ஜாக்பாட்’ போன்ற படங்கள் அனைத்தும் ரசிகர்களை மகிழ்வித்ததோடு தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் மத்தியில் கை. எஸ். ரவிக்குமார் போன்ற நம்பிக்கை தரும் கமர்ஷியல் இயக்குநர் என்ற அடையாளத்தை பெற்றவர். சினிமாவை ஒரு சோதனைக் களமாக பார்க்காமல் கவலைகளை மறக்க தியேட்டருக்கு வரும் ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்கின்ற ஒரே நோக்கத்துடன் இவருடைய படங்கள் வெற்றிகரமாக ஓடிய தோடு தயாரிப்பாளர்களுக்கும் நல்ல லாபத்தை பெற்றுத் தந்தது. இந்த புதிய ஆண்டிலும் ரசிகர்களை மகிழ்விக்கும் பல தரமான படைப்புகளை கொடுக்க உள்ளார். அந்த வகையில் வெற்றிப்பட இயக்குநராக வலம் வரும் கல்யாண் விரைவில் தன்னுடைய புதிய படத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளார்.