கமலக்குமாரி, ராஜ்குமார் தயாரிபில் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் ரஷிதா மகாலட்சுமி, அபி நக்ஷத்ரா, ராஜ்குமார் நாகராஜ், ஆனந்த் நாக், அம்ரிதா ஹால்டர், சிவம் தேவ், ராஜேஷ்வரி ராஜேஷ், சரிதா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “எக்ஸ்ட்ரீம்”. சென்னையில் கட்டப்பட்டுவரும் அடுக்குமாடி கட்டிடத்திலுள்ள ஒரு காங்கரீட் தூணில் ஒரு இளம் பெண்ணின் பிணம் இருக்கிறது. அந்த இளம் பெண்ணை யார் கொலை செய்தார்கள்? எதற்காக கொலை செய்தார்கள்? கொலையாளி யார்? என்பதை கண்டுபிடிப்பதுதான் கதை. இது ஒர் புலனாய்வு திரைக்கதை. குடிசைப் பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அபி நட்சத்திரம் வீட்டு வேலைக்காரி பெண்ணாக வரும் காட்சியில் சிரித்த முகத்துடனும், நயவஞ்கர்களிடம் சிக்கி சின்னாபின்னமாக்கப் படும் காட்சியிலும் தனது நடிப்பை வெளிப்படுத்திருக்கும் விதம் பாராட்டும்படி உள்ளது. அம்ரிதா ஹால்டர் கவர்ச்சிக்கன்னியாக திரையில் தோன்றி இளசுகளின் மனதை கொள்ளை கொள்கிறார். அவரது கதாபாத்திரம் ரசிக்கும்படி உள்ளது. போலீஸ் ஆய்வாளராக நடித்திருக்கும் ராஜ்குமார் நாகராஜன் உணர்ச்சிப்பிழம்பாக நடித்திருக்கிறார். ஆனந்த் நாக், கதாபாத்திரத்தை நன்றாக உள்வாங்கி தனது நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். படத்தின் முன்பகுதியில் சமூக சேவகனாகவும் பின்பாதியில் வில்லனாகவும் வரும் சிவம் தேவ், இருவேறு கதாபாத்திரத்தையும் வேறுபடுத்தி நடித்து பாராட்டைப் பெறுகிறார். படத்தின் உச்சக்கட்ட காட்சி முழுவதையும் தன்வசப்படுத்தி நடித்திருக்கும் உதவி ஆய்வாளராக வரும் ரக்ஷிதா மகாலட்சுமியின் எடுப்பான தோற்றமும் மிடுக்கான நடையும் படம் சோர்வில்லாமல் நகர உதவியிருக்கிறது. ஒளிப்பதிவாளர் டிஜே பாலாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. இசையமைப்பாளர் எம்.எஸ்.ராஜ்பிரதாப்பின் இசை கேட்கும்படியும் ரசிக்கும்படியும் அமைந்திருக்கிறது. மதிப்பீடு 5க்கு 3.