நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு சென்னையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, கடந்த மாதம் 28ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் துவங்கி, 4ம் தேதியுடன் முடிவடைந்தது.கட்சிகள் வேட்பாளர்களை அறிவிப்பதில் தாமதம் செய்ததால், மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் முதல் மூன்று நாட்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்வது குறைந்து காணப்பட்டது. கடைசி நாளில்தான் வேட்பு மனுக்கள் அதிகமாகத் தாக்கல் செய்யப்பட்டது. தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணிகளை உறுதி செய்து தேர்தலுக்கான வேலைகளில் ஈடுபடத்தொடங்கியது. மக்கள் நீதி மய்யம் கட்சியும் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிந்திருந்த நிலையில். அக்கட்சியின் சார்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்குப் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களைக் கட்சித் தலைமை ஏற்கனவே அறிவித்திருந்தது. அக்கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில் . கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சென்னை மந்தைவெளி விசாலாட்சி தோட்டம் பகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பரப்புரையில் ஈடுபட்டார். விசாலாட்சி தோட்டத்தில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கமல்ஹாசனுக்குப் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.