பொன்னியின் செல்வன் படத்தை நடிகர் கமலஹாசன், நடிகர்கள் விக்ரம் கார்த்திக்குடன் அமர்ந்து பார்த்து ரசித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியில் அவர் கூறும்போது, பொன்னியின் செல்வனில் நான் கார்த்திக் நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்பட்டேன் என்று தெரிவித்தார். அனைவரும் கதாபாத்திரமாகவே திரையில் வாழ்ந்திருக்கிறார்கள். விக்ரமன் கார்த்திக் நடிப்பை புகழ்ந்தார். சோழர் மன்னன் இந்து இல்லை என்ற இயக்குநர் வெற்றி மாறனின் கருத்து குறித்து கமல்ஹாசனிடம் கேட்டபோது, “சோழர் மன்னன் காலத்தில் “இந்து மதம்” என்ற ஒன்று இல்லை. அவர்களது காலத்தில் சைவ மதம், வைணவ மதம் என்றுதான் இருந்தது. ஆங்கிலேயன் நம்மை ஆண்ட போது நம்மை அடையாளப்படுத்தவே ‘இந்து’ என்று புது பெயர் வைத்தான்.’ என்று கமல்ஹாசன் விளக்கமளித்தார்.****