ரமணா கம்யூனிகேஷன் சார்பாக தயாரிக்கப்பட்ட ‘காமராஜ்’ திரைப்படம் 2004ம் ஆண்டு தமிழகமெங்கும் திரையிடப்பட்டது. அப்போது அத்திரைப்படம், பத்திரிக்கை ஊடங்கள், அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொது மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வெற்றிப்படமானது. மேலும் அந்த வருடத்திற்கான தமிழக அரசின் சிறந்த படத்திற்கான சிறப்பு விருதையும் பெற்றது. ‘காமராஜ்’ திரைப்படம் வெளியானபோது பிறந்திராத புதிய தலைமுறையினர் தற்போது வாக்களிக்கும் உரிமையைப் பெற்று விட்டனர். அறம் சார்ந்த அரசியலை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘காமராஜ்’ திரைப்படத்தை இந்த புதிய தலைமுறையினரிடமும் கொண்டு சேர்க்க முடிவெடுத்துள்ளது ரமணா கம்யூனிகேஷன் பெருந்தலைவர் காமராஜரின் 122வது பிறந்தநாளை முன்னிட்டு ‘காமராஜ்’ திரைப்படம் தமிழகமெங்கும் ஜூலை 21 ம் தேதி மறுதிரையிடல் செய்யப்படுகிறது.********
இத்திரைப்படத்தில் காமராஜரைப் போன்று உடல் ஒற்றுமையுள்ள ரிச்சர்ட் மதுரம் காமஜராக நடித்துள்ளார். காமராஜரின் குரலை நினைவுறுத்தும் விதமாக எம்.எஸ். பாஸ்கர் பின்னணி குரல் கொடுத்துள்ளார். இசை ஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். செம்பூர் ஜெயராஜ் திரைக்கதை எழுதியுள்ளார். இத்திரைப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். ஏ.ஜெ.பாலகிருஷ்ணன்.