கடந்த 2005 ஆம் ஆண்டு, ஜெயம் ரவி நடித்த ‘இதயதிருடன்’ படத்தின் மூலம் இளம் ரசிகர்கள் மனதை தன்னுடைய கவர்ச்சியால், அழகாலும் கொள்ளை கொண்டவர், நடிகை காம்னா. இப்படத்திற்குப் பிறகு ஜீவனுடன் ‘மச்சக்காரன்’, லாரன்ஸுடன் ’ராஜாதி ராஜா’ ’காசேதான் கடவுளடா’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். கவர்ச்சியால் பல ரசிகர்களை தன் வசமாக்கிய காம்னா, தற்போது சிறிய இடைவெளிக்குப் பிறகு அதே அழகுடன் ரசிகர்களை கவர மீண்டும் களமிறங்க இருக்கிறார்.
சமூக வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது தன்னுடைய அழகிய புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கும் காம்னா, சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது. மேலும் பலர் இன்னும் அதே அழகுடன் இருப்பதாகவும் பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில், நடிகை காம்னா, தமிழில் நடிக்க ஆர்வமாக கதைகளை கேட்டு வருகிறார். கதைக்கு ஏற்றவாறு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்க தயாராகி இருக்கும் காம்னா, விரைவில் தான் நடிக்கும் படங்கள் பற்றிய விவரங்களை அறிவிக்க இருக்கிறார்.