ஆணவக்கொலை பற்றி பேசவரும் ‘நவயுக கண்ணகி’

இத்திரைப்படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார் கிரண் துரைராஜ். இவர் குறும்படங்களின் பின்னணியில் இருந்து வந்து தனது முதல் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் நடித்திருக்கும் அனைவரும் மேடை நாடக கலைஞர்கள் மற்றும் புதுமுகங்கள் மேலும் இப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இதுவே முதல் திரைப்படம். இக்கதை பல உண்மை சம்பவங்களை தழுவி நகர்கிறது. தமிழ் சினிமாவில் பெரும்பாலும் மறைமுகமாகவும் நேரடியாகவும் சாதியை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வந்திருந்தாலும் அவை பெரும்பாலும் ஒற்றைகருத்துக்களுடனும், ஒரு தரப்பினை தற்பெருமை சொல்லியும் அல்லது  அதற்கு மாறாக கருத்துகளையும் தெரிவித்த வண்ணமே  இருக்கிறது.

ஆனால்  இக்கதை சற்று வேறுபட்டு சாதியை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் மற்றும் அதன் கொடுமைகளை   கண்டுக்கொள்ளாமல் இருப்பவர்கள், தெரியாதவர்கள், புரியாதவர்கள்  என்று குழம்பி நிற்கும் சாமானியமக்களின் கருத்தோட்டத்தை பிரதிபலிக்கும் விதமாக இருக்கிறது.

இப்படத்தை பார்த்து முடிக்கும்போது பார்வையாளருக்கு அவர்களின் சாதிய நிலைப்பாட்டை  உணர்த்தும்விதமாக அமைந்திருக்கின்றது.

கோமதி துரைராஜ் தயாரிப்பில்ஷார்ட்பிளிக்ஸ்வெளியீடாக உருவாகி உள்ள படம்நவயுக கண்ணகி’. இத்திரைப்படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார் கிரண் துரைராஜ். பெங்களூருவை சேர்ந்த இவர்குறும்படங்களின் பின்னணியில் இருந்து வந்து தனது முதல் திரைப்படத்தை தமிழில் இயக்கியுள்ளார்.

படத்தின் மைய கதாபாத்திரத்தில் பவித்ரா தென்பாண்டியன் நடிக்க, முக்கிய வேடங்களில் விமல் குமார், டென்சில் ஜார்ஜ், தென்பாண்டியன், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் இரண்டு பாடல்களை சின்மயி மற்றும் சைந்தவிஇருவரும் பாடியுள்ளனர். பாடல்களுக்கு ஆல்வின் இசை அமைத்துள்ளார். கெவின் பின்னணிஇசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை தர்மதீரனும், கலையை மோகன்குமார் தங்கராஜும் கவனித்துள்ளனர். டிசம்பரில்ஷார்ட்பிளிக்ஸ்ஒடிடி தளத்தில்

நவயுக கண்ணகிவெளியாகவுள்ள நிலையில் இப்படம் குறித்த பல தகவல்களை இயக்குநர் கிரண் துரைராஜ்நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

அன்று,

பாண்டிய மன்னனின் அர்த்தமற்ற  தீர்ப்பில் தன் கோவலனை இழந்த கண்ணகி மதுரையை பழிதீர்க்க எரித்தாள் .

இன்று,

அர்த்தமற்ற ஆணவ படுகொலையில் தனது காதலனை இழக்கிறார்,சுவாதி.

அவளை கட்டாய படுத்தி  திருமணம் செய்து வைக்கிறார்கள். காதலனை இழந்த சுவாதி திருமணத்திற்கு பின்பழிதீர்க்க நவயுக கண்ணகியாய் எடுக்கும் தொடக்கமே கதையின் கரு !! இத்திரைப்படத்தின் முதல் பார்வைஇன்று வெளியாகியுள்ளது. விரைவில் இப்படம் டிசம்பரில் ஷார்ட்ஃபிளிக்ஸ் ( ShortFlix) ஓடிடியில் வெளியாகவுள்ளது