காலில் ரத்தம்வர நடித்த படம் இராவண கோட்டம் – சாந்தனு

இராவண கோட்டம் பாத்தின் தயாரிப்பாளர் கண்ணன் என் தந்தை எனக்கு என்ன செய்ய வேண்டும் நினைப்பாரோ அதே போல் நான் முன்னேறத் தேவையான அனைத்தையும் செய்தார். அவருக்கு மிகப்பெரும் நன்றி இந்தப்படம் சக்கரக்கட்டி படத்திற்குப் பிறகு மக்களிடம் அதிகம் எதிர்பார்க்கப்படுகிற படமாக இருப்பது மிக மகிழ்ச்சியாக உள்ளதுஇந்தப் படத்தில் நடிகரைத் தாண்டி, தயாரிப்பு பணிகளும் நான் பார்க்க வேண்டி இருந்தது, தயாரிப்புமிகக் கடினமான வேலை மிகவும் சிரமப்பட்டேன், படக்குழுவிற்கு நிறைய அனுபவம் இருந்தது, காலில் இரத்தம் வர நடித்தேன் அனைவரும் இப்படத்திற்காகப் பல நாட்கள் தூங்காமல் வேலை செய்தனர்.***********

இந்த நான்கு வருடங்கள் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன், படம் பார்த்தபிறகு எனக்கு மிகவும் திருப்திகரமாக இருந்தது, கிராமத்துப் பையனாக நடிக்கப் போகிறோம் என்றுமகிழ்ச்சியாக இருந்தேன் ஆனால் அது அவ்வளவு எளிதல்ல எந்த படத்திலும்நான் இதைச் செய்ததில்லை, நான் மட்டும் இல்லை அனைவரும் இது போல கஷ்டப்பட்டு தான் நடித்தனர்,  இந்தப் படத்தில் தென் மாவட்டத்தில் உள்ள அரசியலைப் பற்றிப் பேசியுள்ளனர், இது ஒரு தரமான படைப்பாகஇருக்கும், அனைவரும் எங்கள் உழைப்பிற்கு ஆதரவு தர வேண்டும் நன்றி

Kannan Ravi Group சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், இயக்குநர் விக்ரம் சுகுமாரன்இயக்கத்தில், ஷாந்தனு நடிப்பில் மண் சார்ந்த  மாறுபட்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம்இராவணகோட்டம்“.  மே 12 உலகமெங்கும் திரைக்கு வரவுள்ள நிலையில்,  இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்புநேற்று இனிதே நடைபெறுகிறது.  

இந்நிகழ்வில்

எடிட்டர் லாரன்ஸ் கிஷோர் பேசியதாவது

இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்குச் நான் இரண்டு நாட்கள் சென்றேன் ஆனால் அங்கு என்னால் சுகுமாரன்சாரை பார்த்துப் பேசக்கூட முடியவில்லை.  ஷுட்டிங் அவ்வளவு பிஸியாக இருந்தது. எல்லோரும் என்னிடம்அவரைப் பற்றிக் கேட்டபோது, ஷூட்டிங் முடிந்ததும் நாங்கள் இருவரும் இணைந்து பணி புரிவோம் என்றுகூறினேன். அது போலப் படப்பிடிப்பு முடிந்து சென்னை வந்தார் மூன்றே நாட்களில் எங்கள் இருவருக்கும் ஒருநல்ல பிணைப்பு உருவானது, இந்த படத்தில் நான் பல விஷயங்கள் கற்றுக் கொண்டேன், ஷாந்தனு சார் இந்தபடத்தில் மிக அதிகமான உழைப்பைப் போட்டுள்ளார் கண்டிப்பாக அதற்கான பலன் அவருக்குக் கிடைக்கும். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் பேசியதாவது.., மதயானைக் கூட்டம் படத்திற்குப் பிறகு நான் வேலை செய்ய வேண்டும் என்று அதிகம் எதிர்பார்த்த ஒருஇயக்குனர் விக்ரம் சுகுமாரன் சார். அது நடந்து விட்டது , ஷாந்தனு நடிகராக மட்டும் இல்லை இப்படத்தில்அனைத்து வேலைகளையும் செய்தார். கண்ணன் சார் போன்ற சிறப்பான தயாரிப்பாளர் வருவது சினிமாதுறைக்கு மிகவும் ஆரோக்கியமானது. அவருக்கு எனது வாழ்த்துக்கள் படம் நன்றாக வந்துள்ளது அனைவரும்இதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அனைவருக்கும் நன்றி.

நடிகர் சஞ்சய் பேசியதாவது…,  எனக்கு இந்த மேடை புதிது, நான் 12 வருடமாக பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஆனால் இந்தப் படம் எனக்குக் கிடைத்தது ஒரு வரம், இயக்குநர் சுகுமாரன் சாருக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன், இந்தப் படத்திற்காக நிறைய இரத்தம் சிந்தி நடித்துள்ளேன், நான் மட்டும் அல்ல அனைவரும்அப்படித்தான் நடித்தனர். இந்த படத்தின் வாழ்வியல் அம்சங்கள் அப்படி அமைந்துள்ளது, அதற்கு நாங்கள் ஈடுசெய்ய வேண்டும் என்று எண்ணினோம்,.இயக்குநர் என்னைப் பெரிய அளவுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்என்று நினைத்தார், எனக்கு அவர் அண்ணனாக இருக்கிறார், அதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படத்தில் அனைவரும் எனக்குப் பல விஷயங்களை கற்றுக் கொடுத்தனர், நான்கு வருட போராட்டம் என்றேசொல்லலாம். இரவு பகல் பாராமல் அனைவரும் உழைத்துள்ளோம், உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

கலை இயக்குநர் நர்மதா பேசியதாவது…   எனக்கு இந்தப் படத்தில் வாய்ப்பளித்த ஷாந்தனு மற்றும் இயக்குநர் சுகுமாரன் சாருக்கு நன்றிஇதுமிகப்பெரிய அனுபவம் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன், படம் நன்றாக வந்துள்ளது அனைவருக்கும்வாழ்த்துகள் நன்றி.

நடிகை தீபா பேசியதாவது.., இராவண கோட்டம் படத்தில் நடித்து வந்தது பள்ளிக் கூடத்திற்கு சென்று வந்தது போல இருந்தது, சுகுமார்சாரிடம் ஒரு நாள் நடித்தாலும் நடிப்பு என்றால் என்னவென்று கற்றுக் கொள்ளலாம், இளவரசு அண்ணனின்பேச்சை நான் பல இடங்களில் ரசித்துக் கேட்பேன், இப்படத்தில் அவருடன் பணி புரிந்தது மகிழ்ச்சியாகஇருந்தது, தம்பி ஷாந்தனு என்னுடன் சகஜமாக பழகி வந்தார் அதற்கு நன்றி, படக்குழுவினர் அனைவருக்கும்நன்றி.

நடிகர் இளவரசு பேசியதாவது.., இந்தப் படத்தின் கலை இயக்குநர் நர்மதாவிற்கு வாழ்த்துக்கள், விக்ரம் சுகுமாரனிடம் ஒளிப்பதிவாளர் மற்றும்எடிட்டராக பணி செய்வது மிகக் கடினம் இருவருக்கும் மிகப்பெரிய வாழ்த்துகள், இந்தப் படத்தில் தென்மாவட்டத்தில் உள்ள அரசியலைப் பற்றிப் பேசியுள்ளனர். படம் பார்த்த பிறகு உங்களுக்கு தெரியும், தென்பகுதிகளில் பல கஷ்டங்கள் உள்ளது. தண்ணீர் மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது , அதற்கான காரணங்களையும் இந்த படத்தில் பேசியுள்ளனர், இயக்குநரை எனக்குப் பல வருடங்கள் முன்பே தெரியும். ஒருபடத்தின் வேலைக்காக மதுரைக்கு அருகில் ஒரு ஊருக்குச் சென்றேன், அப்போது ஒரு நாள் ஒருவர் வீட்டிற்குச்சென்று தண்ணீர் குடித்தேன் அது அவரது வீடுதான், பல நாட்கள் கழித்து அதை என்னிடம் சொன்னார் எனக்குமிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஷாந்தனு வெற்றிக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞன்கண்டிப்பாக இந்த படம் வெற்றி பெறும், தயாரிப்பாளர் கண்ணன் சாருக்கு என் மனமார்ந்த நன்றி, இந்தகுழுவினர் உழைப்பை,  மக்களிடம்  நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டும். அனைவருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர் பேசியதாவது.., மதயானைக் கூட்டம் ஒரு அற்புதமான படைப்பு , இயக்குநர் விக்ரம் சுகுமாரன் சாருடன் இணைந்து பணிசெய்தது மிகவும் மகிழ்ச்சி, பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளார், ஷாந்தனு மிகவும் கஷ்டப்பட்டு இந்தப்படத்தில் வேலை செய்துள்ளார் கண்டிப்பாக அது அனைவரிடமும் சேரும், தயாரிப்பாளர் கண்ணன் மற்றும்படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.  

நடிகை கயல் ஆனந்தி பேசியதாவது3 வருட உழைப்பு. பல தடைகளைத் தாண்டி இந்தப் படம் இப்போது வெளியாகத் தயாராகி உள்ளது மிகவும்மகிழ்ச்சியாக உள்ளது, யாரும் விட்டுக் கொடுக்காமல் இந்தப் படத்திற்கு உழைத்துள்ளோம். விக்ரம்சுகுமாரன் சார் சினிமாவை மிகவும் ரசித்து வேலை செய்பவர், அவருடன் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சியாகஉள்ளது, ஷாந்தனு உடன் இணைந்து நடித்தது மிகவும் சுலபமாக இருந்தது. இந்தப் படம் ராம்நாடு மக்களின்வாழ்க்கை பற்றிப் பேசுவதாக இருக்கும். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி இந்த படத்தை அனைவரும்தியேட்டரில் வந்து பார்க்க வேண்டும் நன்றி.