கண்ணப்பா’ திரைப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் மக்களிடம் ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் நிலையில், தற்போது நாயகன் விஷ்ணு மஞ்சு – நாயகி ப்ரீத்தி முகுந்தனின் ஆத்மார்த்தமான காதல் கதையை விவரிக்கும் காதல் பாடல் வெளியாகியுள்ளது. இந்த இனிமையான காதல் பாடல் மெல்லிசை ஷான் மற்றும் சாஹிதி சாகந்தி ஆகியோரல் பாடப்ப்ட்டுள்ளது. ஸ்டீபன் தேவஸ்ஸி இசையில், கிரீஷ் நகோடின் இதயப்பூர்வமான வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடல் ரசிகர்களின் மனங்களை மயக்கி வருகிறது. விஷ்ணு மஞ்சு கண்ணப்பாவாகவும், ப்ரீத்தி முகுந்தனுடன் மோகன்லால், அக்ஷய் குமார், பிரபாஸ் மற்றும் காஜல் அகர்வால் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். கண்ணப்பா ஏப்ரல் 25, 2025 அன்று வெளியாக உள்ளது******
மனதை மயக்கும் இனிமையான குரல், மனதைத் தொடும் பாடல் வரிகள் மற்றும் கனவு உலகத்தை நேரில் பார்ப்பது போன்ற காட்சிகள் ஆகியவை ஒன்றிணைந்தது போன்ற உணர்வை இப்பாடல் ரசிகர்களிடம் உருவாக்கியுள்ளது. விஷ்ணு மஞ்சு மற்றும் ப்ரீத்தி முகுந்தனின் திரை இருப்பு மற்றும் இருவருக்கும் இடையிலான ஆத்மார்த்தமான காதலையும் இப்பாடல் உணர்த்துவதோடு, பிரமாண்டமான ஆன்மீக காவியமாக உருவாகியுள்ள ‘கண்ணப்பா’ படத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. பிரமிக்க வைக்கும் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாடல், காதலை மட்டும் காட்டாமல் கண்ணப்பாவில் ஆழமாக ஓடும் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. இது காதல், நம்பிக்கை மற்றும் பக்தி ஆகியவற்றை வெளிக்காட்டுவதோடு, இவை அனைத்தும் சக்திவாய்ந்த உணர்ச்சிகளுடன் பிணைக்கப்பட்டிருப்பதை உணர வைக்கிறது. இந்த பாடல் அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருவதோடு, ஆன்மீக ரீதியிலான ஒரு பிரமாண்ட காவியத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அம்சங்களில் இப்பாடலும் ஒன்றாக அமைந்துள்ளது. சிவ பக்தரான கண்ணப்பாவின் புராணக் கதையின் காவியமான கண்ணப்பா, இந்த ஆண்டின் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும்.