கார்த்தியின் மக்கள் சேவையில் வெற்றிகரமான 400-வது நாள் கடந்தது

கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக வளசரவாக்கம் தலைமை அலுவலகம் வாசலில் ஒரு வண்டிக் கடை உணவகம் நடத்தப்பட்டு வருகிறதுஇந்த உணவகத்தில் ரூ50 மதிப்புள்ள தரமான, சுவையான பிரிஞ்சி சாதம் ரூ 10-க்கு வழங்கப்பட்டு வருகிறது. லாப நோக்கமின்றி நடத்தப்பட்டுவரும் இந்த உணவகத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள், லோரி ஓட்டுநர்கள், உடலுழைப்பு தொழிலாளர்கள் தினமும் உணவருந்தி வருகிறார்கள்.  ஏழைகளுக்காக நடத்தப்படும் நடிகர் கார்த்தியின் இந்த உணவகம் நேற்றுடன் 400 வது நாளை கடந்துள்ளது.*******

குறிப்பாக ஊருக்கே உணவு சப்ளைசெய்யும் ஸ்விக்கி, ஜூமோட்டோ டெலிவரி பாய்கள் போன்றோர் இந்த உணவகத்தில் தினசரி உணவுஉட்கொள்கிறார்கள்.