கார்த்திக் வெங்கட்ராமன் தயாரித்து நடித்திருக்கும் படம் ‘எனக்கு எண்டே கிடையாது‘ இவருடன்விக்ரம்ரமேஷ், ஸ்வயம் சித்தா, சிவகுமார் ராஜு, முரளி சீனிவாசன், சக்திவேல் ஆகியோரும்நடித்திருக்கின்றார்கள். ஒரு நாள் இரவில், கணவன் வீட்டில் இல்லை எனக்கூறி வாடகை கார்ஓட்டுநருடன் உடலுறவு கொள்கிறாள் அந்த வீட்டின் எஜமானி. விடிந்ததும் வீட்டு கழிப்பறையில் ஒருவயதானவரின் பிணத்தை பார்த்து அதிர்ந்த ஓட்டுநரிடம், “பிணத்தை பார்த்துவிட்டாயா” என்று எஜமானிகேட்கிறாள். அதிச்சியில் அந்த எஜமானியை தள்ளுகிறான். அவளும் கீழே விழுந்து இறந்து விடுகிறாள். இப்போது அந்த வீட்டில் இரண்டு பிணங்கள்கிடக்கிறது. இதனால் பயந்து வெளியே ஓட முயற்சிக்கிறான். ஆனால் அந்த வீட்டின் கதவு ரகசிய குறியீடு எண் கேட்கிறது. அதனால் வெளியே போகமுடியாமல்கழிப்பறையில் பிணத்தின் பக்கத்திலேயே உட்கார்ந்து விடுகிறான். அதன் பிறகு அந்த வீட்டுக்கு வெளியே இருந்து ஒரு திருடனும் ஒரு அரசியல்வாதியும் கதவின் ரகசியகுறியீடை அழுத்தி வீட்டுக்குள் தனித்தனியே வருகிறார்கள். அதன்பிறகு அவர்களும் வெளியேசெல்லமுடியாமல் கொலை செய்யப்படுகிறார்கள். இறந்து கிடந்த முதியவர் யார்? ஏன் கொலைசெய்யப்பட்டார்கள்? வாடகை கார் ஓட்டுநர் எப்படி தப்பிக்கிறான் என்பதுதான் கதை. ஒரு வீட்டுக்குள்ஐந்து நடிகர்களை மட்டுமே வைத்து படத்தை விறுவிறுப்பாகவும் அடுத்த காட்சியை ஆவலுடன்எதிர்பார்க்க வைக்கும் விதத்திலும் சிக்கனமாகவும் படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர்பாராட்டுதலுக்குறியவர். நேர்த்தியான இசையும் ஐவரின் நகைச்சுவை கலந்த நடிப்பும் படத்திற்கு வலுசேர்த்துள்ளது.