கூலிவேலை பார்க்கும் ஏழை தொழிலாளி கருணாஸ். அவரது மனைவி ரித்திகா. மருத்துவமனையில் குழந்தையை பெற்றுவிட்டு காணாமல் போய்விடுகிறார் கருணாசின் மனைவி ரித்திகா. மனைவியை கண்டுபிடித்து தரும்படி போலீசில் புகார் செய்கிறார் கருணாஸ். கருணாசின் மனைவி ரித்திகாவின் பிணம், ஒரு கார்பரேட் கார் கம்பெனிக்கு தேவைபடுகிறது. அந்த கார் கம்பெனிக்கு போலீஸ் அதிகாரிகளும் மத்திய அரசு அதிகாரிகளும் எவ்வாறு உறுதுணையாக இருந்து ஏழை கருணாசுக்கு அநீதி இழைக்கிறார்கள் என்பதுதான் கதை. அநீதி இழைக்கும் அரசாங்கத்தின் முகத்திரையை கிழித்த இயக்குனரை பாராட்டவேண்டும். **********
கூலித்தொழிலாளியாக வரும் கருணாசின் நடிப்பு அருமையாகயுள்ளது. கைக்குழந்தையுடன் போலீசாரிடம் அழுது கெஞ்சிவதும் போலீசாரிடம் பிரம்படி வாங்கி கதறுவதும், நகைசுவையில் கலக்கிய கருணாசா இப்படி நடிக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. கதையின் கருப்பொருளாக இருக்கும் ரித்திகாவை திரையில் அரிதாகத்தான் தென்படுகிறார். அநீதிக்கு துணைபோன பாவத்தை சுமந்தவனின் நிலைமையை அருமையாக வெளிப்படுத்திருக்கிறார் அருண்பாண்டியன்.