‘டைகர் 3’ படத்தின் காட்சிகளுக்காக 2 மாதங்கள் வரை என்னை தயார்படுத்தி கொண்டேன்” – கத்ரீனா கைப்

டைகர் 3 படத்தில் நடிப்பதற்காக 2 மாதங்கள் என்னை தயார்படுத்திக் கொண்டேன் என்று கத்ரீனா கைப் கூறியுள்ளார்.கத்ரீனா கூறும்போது, “தன்னுடைய குடும்பத்தையோ அல்லது நாட்டையோ அல்லது மனித நேயத்தையோகாப்பாற்றவேண்டும் என்கிற நிலை வரும்போது ஒரு பெண்ணால் செய்ய முடியாதது என எதுவுமில்லை  என்பதைத்தான்டைகர் 3’ காட்டுகிறது. வளர்ப்பவர்களாக மட்டுமல்ல கடுமையான பாதுகாவலர்களாகவும் பெண்களால் இருக்க முடியும் என்பதை மக்களிடம் சொல்வதற்கு  சோயா போன்ற ஒரு கதாபாத்திரம. முக்கியமானது மற்றும் அவசியமானதும் கூட.. என்னுடைய திரையுலக பயணத்தில் சோயா அதிகப்படியாக போற்றப்பட க்கூடிய கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கும்.” என்கிறார்.*******

மேலும் அவர் கூறுகையில், “ அவளது மன உறுதியாலும் தைரியத்தாலும் எந்த ஒருவருடனும் அவள் எப்படிபொருத்திக்கொள்ள முடிகிறது என்பதை நான் ரசிக்கிறேன். அவள் ஒரு சண்டையிலிருந்து எப்போதும்பின்வாங்கியதில்லை. ஆக்சன் என வரும்போது ஆணை விட மிகச்சிறப்பாக அவளால் செயல்பட முடியும். சோயாவின் ஆக்சன் ஸ்டைல் என்பது தனித்துவமானது. இந்த டிரைலரில் நீங்கள் பார்த்த சில காட்சிகளைபோல மிகவும் சிக்கலான சண்டைக்காட்சிகளை கூட அவளால் எளிதாக மேற்கொள்ள முடியும்.  சோயா மொத்தஎதிரி படைகளையும் எதிர்ப்பவள் மட்டுமல்ல, அவளே அனைவருடன்  தானாகவே சண்டையிட கூடியவள்என்கிறார்.