இயக்குநர் கேந்திரன் முனியசாமி இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘ஓங்காரம்’. இதில் கேந்திரன் முனியசாமி, வர்ஷா விஸ்வநாதன், ஸ்ரீ தர், ஏழுமலை, முருகன், ஹன்சிகா சிவக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் கேந்திரன் முனியசாமி பேசுகையில், ” பல தடைகளைக் கடந்து ‘ஓங்காரம்‘ திரைப்படம் 30 ஆம்தேதியன்று வெளியாகிறது. தமிழ் கலாச்சாரங்களை தமிழ் திரைப்படங்கள் திட்டமிட்டு அழித்து வருகிறது. உதாரணத்திற்கு தாலி என்பது தமிழ் கலாச்சாரத்துடன் திருமணம் என்ற உறவு முறையுடன் அழுத்தமான தொடர்பு கொண்டது. ஆனால் இங்கு தற்போது அந்த புனிதமான தாலியை ‘தாலியறுப்பு விழா‘ என்று அதற்கு ஒரு விழாவை கொண்டாடுகிறார்கள். இதனை ஆதரிக்கும் திராவிடர் கழகத்திற்கு தான் நான் எதிரி. திமுகவிற்கு அல்ல. இதற்கு எதிராகவும் இந்தபடத்தில் பேசியிருக்கிறோம்.**********
தமிழக முழுவதும் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘ஓங்காரம்‘ திரைப்படம் வெளியிடுவதற்கான தீவிரமுயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். அன்றைய தேதியில் எத்தனை திரைப்படங்கள் வெளியானாலும், எங்களுடைய‘ஓங்காரம்‘ திரைப்படம் குறைவான திரையரங்குகளில் வெளியானாலும், வெளியான பிறகு மக்களின் ஆதரவுடன்சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் இந்தப் படத்திற்கான திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனக்குதமிழக மக்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. ஏனெனில் நான் மக்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து பணத்தைபறிக்கவில்லை. ரயிலில் படத்தின் போஸ்டரை விளம்பரப்படுத்தி மக்களை ஏமாற்றி அவர்களின் பணத்தைதிருட மாட்டேன். என் படத்தை பார்க்க வரும் ரசிகர்களும், பார்வையாளர்களும் தான் என் படத்திற்கானவிளம்பர தூதுவர்கள். வெள்ளிக்கிழமை படம் வெளியான பிறகு, அன்று மாலை என் படத்தை மக்கள்கொண்டாடுவார்கள். நான் வெற்றி பெறுவேன்.
‘ஓங்காரம்‘ திரைப்படம் கல்லூரியில் பயிலும் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வைஉண்டாக்கும் திரைப்படம் என்பதால், மகளிர் கல்லூரிகளில் இந்த திரைப்படத்தை இலவசமாகதிரையிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.
கல்வி கற்பதற்கு சாதி ரீதியாக இட ஒதுக்கீடு வழங்கியிருப்பது தவறு. சாதி ரீதியாக இட ஒதுக்கீடுகொடுக்கப்பட்டதால் தான் தவறு நடந்தது என நான் சொல்லவில்லை. பள்ளி, கல்லூரிகளில் தகுதியற்றவர்கள்பணி நியமனம் செய்யப்படும்போது, அவர்களால் தான் தவறுகள் ஏற்படுகிறது என்பதை தான் சுட்டிக்காட்டிஇருக்கிறேன்.
சாதி ஒரு தகுதியா? 95 மதிப்பெண்களை பெற்றவர்களை வெளியில் நிற்க வைத்துவிட்டு, 35 மதிப்பெண்களைபெற்றவருக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமனம் வழங்குவது எப்படி தகுதியாகும்?
இங்கு வேலை வாய்ப்பு என்று வந்துவிட்டால், தகுதியானவர்கள் பலர் இருந்தாலும், குறிப்பிட்ட சாதியினருக்குஇத்தனை பணி வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்ற ஒரு நடைமுறை இருக்கிறது. இது மறுபரிசீலனைசெய்யப்பட வேண்டும்.
இங்குதான் சாதி ஒழிக்கப்பட்டு விட்டதே..! சாதியை ஒழித்தவர்களுக்கு இங்கு விழா கொண்டாடுகிறீர்கள்தானே..! பிறகு ஏன் மீண்டும் சாதியைக் கொண்டாடுகிறீர்கள்.? சாதி ஒழிப்பு என்பது சாத்தியமற்றது. சாதி ஒற்றுமை என்பது மட்டுமே சாத்தியமாகும்.
முதலில் இந்த கதையை வளர்ந்து வரும் நடிகர்களிடம் சொன்னேன் யாரும் நடிப்பதற்கு முன்வரவில்லை. முன்வந்த சிலரும் திரைக்கதையில் தலையிட்டனர். இந்த படத்தில் பி சி ஆர் எனும் சட்டத்தை பற்றி பேசிஇருக்கிறேன். இந்த சட்டம் தவறு என்று நான் சொல்லவில்லை. ஆனால் தவறானவர்களால்.. தவறாக பயன்படுத்தப்படுகிறது.. என்பதனை சொல்லி இருக்கிறேன்.
தமிழ் கலாச்சாரங்களை தமிழ் திரைப்படங்கள் திட்டமிட்டு அழித்து வருகிறது. உதாரணத்திற்கு தாலி என்பது தமிழ் கலாச்சாரத்துடன் திருமணம் என்ற உறவு முறையுடன் அழுத்தமான தொடர்பு கொண்டது. ஆனால் இங்கு தற்போது அந்த புனிதமான தாலியை ‘தாலியறுப்பு விழா‘ என்று அதற்கு ஒரு விழாவை கொண்டாடுகிறார்கள். இதனை ஆதரிக்கும் திராவிடர் கழகத்திற்கு தான் நான் எதிரி. திமுகவிற்கு அல்ல. இதற்கு எதிராகவும் இந்தபடத்தில் பேசியிருக்கிறோம்.
உயர்கல்வி கற்கும் கல்லூரிகளில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமை பற்றி பேசி இருக்கிறோம். குறிப்பாக தனியார் கல்லூரியில் பாலியல் வன்கொடுமைக்கு தாளாளர்கள், அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள்எப்படி இதற்கு உடந்தையாக இருக்கிறார்கள் என்பதனை விவரித்திருக்கிறேன்.
அண்மையில் கூட சமூக வலைத்தளத்தில் ஒரு ஒலிக்குறிப்பு வெளியானது. ஆசிரியர் ஒருவர் மாணவியிடம்பாலியல் தொல்லை தருகிறார். அந்த மாணவி மாதவிடாய் காலகட்டத்தில் இருக்கிறேன் என்றுஅழுதுகொண்டே கூறுகிறார். இருந்தாலும் பரவாயில்லை வா என அந்த ஆசிரியர் அழைக்கிறார். இந்தஆசிரியரின் நாக்கை துண்டித்து இருந்தால்..! இதுபோன்ற கடுமையான சட்டங்கள் இங்கு இல்லையே..! என்றஅறச்சீற்றத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் மாநில கட்சி, தேசிய கட்சி என எந்த அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டாலும், அதை எதிர்த்து துணிச்சலுடன் கேள்விக் கேட்பேன்.
தமிழ் சினிமாவில் வில்லனாக இருக்க வேண்டும் என்றால், அவர் வன்னியனாக இருக்க வேண்டும். தேவராக இருக்க வேண்டும் அல்லது கோனாராக இருக்க வேண்டும் அல்லது நாடாராக இருக்க வேண்டும். இவர்கள்தான் வில்லன் என தீர்மானித்திருக்கிறார்கள். இதனால் நான் யாரை குறிப்பிடுகிறேன் என்று நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.
இந்தப் படத்தில் உண்மையான குற்றவாளி யார்? என்று நான் சுட்டிக்காட்டி இருக்கிறேன். நீங்கள் இந்தப்படத்தை பார்த்தால் தான் புரியும்.
இந்தப் படத்தின் கதை உண்மை சம்பவங்களை தழுவி தயாராகி இருக்கிறது. குறிப்பாக படத்தில் இடம்பெறும் பி சி ஆர் சட்டம் தொடர்பான காட்சி, நிஜமாக நடைபெற்ற சம்பவத்தினை படமாக்கி இருக்கிறேன்.
இந்தப் படத்தை தணிக்கைக் குழுவினர் பார்வையிட்டு எங்களை பாராட்டி இருக்கிறார்கள். இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ” என்றார்.
இந்த ஓங்காரம் திரைப்படத்தை கெளசல்யா தயாரிக்க இணை தயாரிப்பாளர்கள் ரேகா,கார்த்திகாஇப்படத்தில் பணியாற்றி உள்ளனர்.