விராட் கர்ணா நடிக்கும் படம் ‘நாக பந்தம்’

‘ நாக பந்தம் ‘ திரைப்படத்தில் ருத்ரா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கும்  விராட் கர்ணாவின் முதல் பதாகை வெளியிடப்பட்டது.  திரைப்பட தயாரிப்பாளர் அபிஷேக் நாமா இயக்கியுள்ள இந்த  திரைப்படத்தின் பதாகையை  ராணா டகுபதி வெளியிட்டார். இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை அபிஷேக் நாமா எழுதி இருக்கிறார். இதனை என்.ஐ.கே. ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கிஷோர் அன்னபு ரெட்டி , அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். இதில் நபா நடேஷ் , ஐஸ்வர்யா மேனன், ஜெகபதி பாபு , ஜெயப்பிரகாஷ், முரளி சர்மா, பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தியாவின் பண்டைய விஷ்ணு கோயில்களின் மறைக்கப்பட்ட ரகசியத்தை இந்த திரைப்படம் ஆய்வு செய்கிறது.******

குறிப்பாக நாக பந்தத்தின் புனித நடைமுறையை மையமாகக் கொண்டிருக்கிறது. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி மற்றும் பூரி ஜெகன்னாத் போன்ற ஆலயங்களில் சமீபத்திய புதையல் கண்டுபிடிப்புகளால் ஈர்க்கப்பட்டு, இந்த கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த தெய்வீக இடங்களை சுற்றியுள்ள வசீகரிக்கும் வகையிலான புராணங்களின் அடிப்படையிலும் .. அவற்றை பாதுகாக்க வடிவமைக்கப்பட்டிருக்கும் புதிரான சடங்குகளையும் பிரதிபலிக்கிறது. இந்த திரைப்படம் ஒரு பழமையான மர்மங்களை புதிய நவீன கதையம்சத்துடன் உயிர்ப்பிக்கிறது.  எஸ். சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு அபே இசையமைக்கிறார். படத்தின் வசனங்களை கல்யாண் சக்கரவர்த்தி எழுத, ஆர். சி. பனவ் படத்தொகுப்பு பணிகளை கையாள்கிறார். அசோக் குமார் கலை இயக்குநராக பங்களிப்பு செய்கிறார்.  நாக பந்தம் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி, இந்த ஆண்டில் வெளியாகும்.

தொழில்நுட்பக் குழு :  தயாரிப்பு நிறுவனம் : NIK ஸ்டுடியோஸ் & அபிஷேக் பிக்சர்ஸ்  வழங்குநர் : லட்சுமி இரா & தேவன்ஷ் நாமா  கதை, திரைக்கதை & இயக்கம் : அபிஷேக் நாமா  தயாரிப்பாளர் : கிஷோர் அன்னபு ரெட்டி  ஒளிப்பதிவு : எஸ். சௌந்தர்ராஜன்  இசை : அபே  வசனம் : கல்யாண் சக்கரவர்த்தி  படத்தொகுப்பு : ஆர் சி பனவ் சண்டை பயிற்சி : வெங்கட் & விளாட் ரிம்பர்க் ஆடை வடிவமைப்பாளர் : அஸ்வின் ராஜேஷ்  தலைமை நிர்வாக அதிகாரி : வாசு பொதினி  தயாரிப்பு வடிவமைப்பாளர் : அசோக் குமார்  நிர்வாக தயாரிப்பாளர் : அபிநேத்ரி ஜக்கல்  ஸ்கிரிப்ட் டெவலப்மென்ட் : ஷ்ரா 1-  ராஜீவ் என். கிருஷ்ணா  VFX –  தண்டர் ஸ்டுடியோஸ்  VFX  சூப்பர்வைசர் : தேவ் பாபு காந்தி ( புஜ்ஜி ) விளம்பர வடிவமைப்பு : கானி ஸ்டுடியோ  மக்கள் தொடர்பு : யுவராஜ்.