நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கடந்த 2017-ம் ஆண்டு கொடநாடுபங்களாவில் நடந்தகொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கில் சயானிடம் மறு விசாரணை, கனகராஜ்சகோதரிடம் விசாரணை, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் கொடநாடு எஸ்டேட்மேலாளர் என பலரிடமும் போலீசார் மேற்கொண்டு வரும் அதிரடி விசாரணைகளால் தற்போது வழக்குமீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள 5 தனிப்படை போலீசாரும் தனித்தனி குழுவாக பிரிந்துஇந்த வழக்கில் குற்றவாளிகளாக கருதப்படுபவர்கள், அரசு தரப்பு சாட்சிகளில் இதுவரைவிசாரிக்கப்படாமல் உள்ளவர்கள் மற்றும் இதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்கள், எனபலரிடமும் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை ஐ.ஜி.சுதாகர், டி.ஐ.ஜி, எஸ்.பி. ஆஷிஷ்ராவத்த தலைமையிலான அதிகாரிகள் கோத்தகிரி போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து கொடநாடுஎஸ்டேட்டிற்கு சென்ற ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான அதிகாரிகள் அந்த பங்களா முழுவதும் ஆய்வுசெய்தனர். அப்போது கொலை நடந்த 8-வது கேட் பகுதிக்கு சென்றனர். அங்கு வைத்து, காவலாளி கொலைசெய்யப்பட்டது எப்படி? எவ்வாறு கொல்லப்பட்டார்? என பல கோணத்தில் அங்குள்ளவர்களிடம்விசாரணை நடத்தினர். மேலும் காயம் அடைந்த கிருஷ்ணபகதூர் தற்போது எங்கு உள்ளார்? என்பதுகுறித்து விசாரித்து உள்ளனர். தொடர்ந்து பங்களாவிற்குள் சென்று கொள்ளை சம்பவம் அரங்கேறிய அறை ஆகியவற்றையும் நேரில்பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், அதில் இருந்த பொருட்கள் என்ன என்பது குறித்தும், கொலையாளிகள் எந்த கேட்டின் வழியாக உள்ளே நுழைந்தனர்? என எஸ்டேட் மேலாளரிடம்விசாரித்தனர். மேலும் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் மற்றும் அவர்களின் வீடுகளுக்கு சென்றும் அதிகாரிகளில்நேரில் விசாரணை மேற்கொண்டனர். பங்களாவில் உள்ள ஜெனரேட்டர் அறை, சி.சி.டி.வி.கேமிராக்கள் மெயின் அறை முழுவதும் தீவிர சோதனை மேற் கொண்டனர். ஜெனரேட்டர் அறையில் சோதனை மேற்கொண்டபோது, கொள்ளை நடந்த போது மின்சாரம்துண்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் உடனடியாக ஜெனரேட்டர் இயக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால்அன்றைய தினம் ஜெனரேட்டர் இயக்கப்படவில்லை. அதற்கு என நியமிக்கப்பட்ட ஊழியர் அன்றையதினம் எங்கே சென்றார். யார்? அவரை ஜெனரேட்டரை இயக்க வேண்டாம் என்று யாராவதுசொன்னார்களா? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அங்குள்ள ஊழியர்களிடம் விசாரணை நடத்தியதுடன், பங்களாவில் இருந்து வழக்குதொடர்பான ஆதாரங்களை திரட்டினர். கொள்ளை சம்பவம் நடந்தபோது பங்களாவில் மர வேலைகளும், சிறு, சிறு கட்டிட வேலைகளும்நடந்து வந்துள்ளன. இந்த வேலைகளில் அதிகமாக கோத்தகிரி மற்றும் கூடலூர் பகுதியைசேர்ந்தவர்களே ஈடுபட்டுள்ளனர்.எனவே அவர்களிடமும் விசாரணை நடத்த திட்டமிட்ட அதிகாரிகள், கோத்தகிரியில் உள்ள ஆசாரிகள் மற்றும் கட்டிட தொழிலாளர்களிடம் சம்பவம் தொடர்பாகவிசாரணை நடத்தினர். சுமார் 3½ மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த விசாரணையை முடித்துகொண்டு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதற்கிடையே கொடநாடு பங்களாவில் வேலை பார்த்த கட்டிட தொழிலாளர்களிடம் விசாரிப்பதற்காகஒரு தனிப்படை போலீசார் கூடலூருக்கு விரைந்தனர். அவர்கள், அங்கு பங்களாவில் வேலை பார்த்தகட்டிட தொழிலாளிகள் மற்றும் மரவேலைகளில் ஈடுபட்ட தொழிலாளிகளின் வீடுகளுக்கு நேரடியாகசென்று அதிரடி விசாரணையில் இறங்கினர். அப்போது கொள்ளை நடந்த சம்பவம் குறித்தும், அவர்களுக்கு தெரிந்த தகவல்களை போலீசார் பெற்று கொண்டனர்.