கோவையில் கலப்பட டீசல் லாரி பறிமுதல்

கோயம்புத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான சேலம்சங்ககிரிநாமக்கல்திருசெங்கோடுபொள்ளாச்சி ஆகிய பகுதிகளில்கலப்பட டீசல் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறைகாவல்துறை கூடுதல் இயக்குநர், திரு.ஆபாஸ்குமார்.கா..,அவர்களின் உத்தரவுப்படிகாவல் கண்காணிப்பாளர்கள்திரு.ஸ்டாலின்திரு.பாஸ்கர் அவர்களின் நேரடி மேற்பார்வையில்காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள்தலைமையில் பல குழுக்களாகப் பிரிந்து மேற்படி பகுதிகளில்கலப்பட டீசல் வாகன சோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கலப்பட டீசல் சம்பந்தமாகமொத்தம் 07 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 26400 லிட்டர்கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டு அந்த டீசல் ஏற்றி வந்த 05 டேங்கர் லாரிகள் மற்றும் 03-Tata Ace வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ள. மேலும் கடத்தல் செயலில் ஈடுபட்ட 10 நபர்கள்கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்அதில் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கள்ளசந்தை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்கநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

இதில் 13.08.21ம் தேதி சேலம் மாவட்டம் சங்ககிரி குப்பனூர்பிரிவு சாலையில் வாகன தணிக்கையின் போது அதிகாலை சுமார்03.00 மணியளவில் கோவையிலிருந்து சேலம் நோக்கி வந்த TN-49-AM 9978 என்ற எண்ணுள்ள டேங்கர் லாரியில் சுமார் 4000 லிட்டர்அளவுள்ள கலப்பட டீசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதுஓட்டுநர்மதியழகன் (47) .பெராஜு மற்றும் க்ளினர் செல்வம் (26) .பெ.சமுத்திரம் மற்றும் உரிமையாளர் இன்பராஜ் திருப்பூர் ஆகியோர்கள்கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது

அதேபோல் பொள்ளாச்சி கே.ஜிசாவடி எட்டிமடை கே.பி.எஸ்குடோன் அருகில் 12.08.21 ம் தேதி வாகனத் தணிக்கையில் 4000 லிட்டர் ஏற்றி வந்த லாரி TN 88 F 8767 மற்றும் TN 38 U 3594 என்றTATA ACE வாகனங்களை ஓட்டி வந்த ஓட்டுனர்கள் சபாபதி மற்றும்செல்வ கருப்பையா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்மேலும்சேலம் கேது நாயக்கபன்பட்டியில் கடந்த 05.08.21 ம் தேதி வாகனத்தணிக்கையில் 1350 லிட்டர் ஏற்றி வந்த லாரி TN 39 CD 2323 மற்றும்Steel barrel பறிமுதல் செய்யப்பட்டு வெங்கடேசன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் சேலம் சங்ககிரி முதல் எடப்பாடி ரோடு வாரிபேக்கரி முன்பு 06.08.21 ம் தேதி வாகனத் தணிக்கையில் 17050 லிட்டர் ஏற்றி வந்த லாரிகள் TN 34 L 0378, KA 01 AE 7577 மற்றும்TN 29 BD 1393 என்ற TATA ACE வாகன ட்டுனர்கள் கலப்பட டீசல்உரிமையாளர்களான ஆரோக்கியராஜ்கவுதம்சங்கர் மற்றும்பழனிசாமி ஆகியோர்கள் கைது செய்யப்பட்டனர்மேலும் நாமக்கல்தொட்டிப்பட்டியில் 25.06.21 ம் தேதி 7000 லிட்டர் கலப்பட டீசலைஏற்றி வந்த லாரி TN 18 S 3528 வாகன ஒட்டுனர் மற்றும்உரிமையாளர் ஆனந்தராஜ்தமிழ்ராஜ் ஆகியோர்கள் கைதுசெய்யப்பட்டனர்

அதேபோல் நாமக்கல் முத்தாலப்பட்டி பைபாஸ் ரோட்டில்வாகனத் தணிக்கையில் 01.08.21 ம் தேதி 1000 லிட்டர் கலப்படடீசல் ஏற்றி வந்த லாரி TN 01 AT 4223 ன் வாகன ட்டுனர் ஈஸ்வரன்கைது செய்யப்பட்டார்மேலும் சேலம் தேசிய நெடுஞ்சாலைபச்சபாளி ரோட்டில் 01.08.2021 ம் தேதி 350 லிட்டர் கலப்பட டீசல்டேங்கரில் வைத்து அரசு அனுமதி இல்லாமல் கள்ளத்தனமாக அங்குசெல்லும் வாகனங்களுக்குக் குறைந்த விலையில் விற்பனை செய்யவந்த டேங்கர் உரிமையாளர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்தொடர்ந்து கலப்பட டீசல் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர்தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்க கடுமையான நடவடிக்கை எடுக்கதொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மக்கள் தொடர்பு: Ksk selva