எஸ்.சிவகமார் தயாரிப்பில் என்.பிரகாஷ் இயக்கிய படம் “குடிமகான்” இப்படத்தில் விஜய் சிவன், சாந்தினிதமிழரசன், சுரேஷ் சக்ரவர்த்தி, நமோ நாராயனன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சமுதாய சீர்திருத்தகருத்து என்று படதில் எதுவும் இல்லை. காசு கொடுத்து படம் பார்க்க வந்தவர்கள் கவலையை மறந்துசிரித்துவிட்டு போக வேண்டும் என்ற நோக்கத்தில்தான் படம் எடுக்கப்பட்டுள்ளது. கதாநாயகன் விஜய்சிவன் குளிர்பானம் குடித்தால் அது ஆல்க்ககால் போதை பானமாக மாறிவிடுகிறது. அதனால் குடிகாரன்செய்யும் சேட்டையெல்லாம் செய்கிறார். போதை தீர்ந்ததும் என்ன நடந்தது என்று அவருக்கே தெரியாது. ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை நிரப்பும் வேலை செய்யும் அவர், போதையில் 100 ரூபாய்கட்டுகளை அடுக்கும் பெட்டியில் 500 ரூபாய் கட்டுகளை அடுக்கிவிடுகிறார். ஏடிஎம்மில் 400 ரூபாய்எடுக்க வந்தவர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் வந்துவிடுகிறது. இப்படி பலர்பேர் வந்து 8லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்களையும் எடுத்துவிட்டு போய்விடுகிறார்கள். இதனால் அவரது வேலையும் போய்விடுகிறது. ஏடிஎம்மில் பணம் எடுத்தவர்களிடமிருந்து பணத்தை மீட்டாரா இல்லையா என்பதுதான் கதை. படம்முழுவதும் நகைச்சுவையாகவே செல்கிறது.**********