கும்பகோணம் காமாட்சி அம்மன் கோவிலில் ஸ்ரீ லட்சுமி திரை கலைக்கூடம் வழங்கும் ஸ்தபதி டாக்டர் ஆர் பிரபாகர் தயாரிப்பில் உருவாகும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்‘ திரைப்படத்தின்பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடங்கியது. எஸ் ஜேஅலெக்ஸ் பாண்டியன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். கௌஷிக் ராம் கதாநாயகனாகவும், பிரபல யூடியூபர்களான ரவிவிஜே மற்றும் புவனேஸ்வரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கும் இப்படத்தில் சிங்கம்புலி , குக்வித் கோமாளி புகழ் சில்மிஷம் சிவா, அஜித் யுனிக், டி எஸ் ஆர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.***********
ஸ்ரீ லட்சுமி திரை கலைக்கூடம் சார்பில் கும்பகோணத்தை சேர்ந்த உலக புகழ் பெற்ற ஸ்தபதி ரோட்டேரியன்டாக்டர் பிரபாகரின் தயாரிப்பில் இந்தத் திரைப்படம் உருவாகிறது. திருமதி துர்கா தேவி பாண்டியன் இணைத்தயாரிப்பாளராக உள்ளார்.
பிரஹத் முனியசாமியின் ஒளிப்பதிவு செய்கிறார், தயாரிப்பு மேற்பார்வையாளராக நமஸ்காரம் சரவணன்பணியாற்றுகிறார். இத்திரைப்படத்தின் கலை இயக்குநர் நந்தகுமார் ஆவார். நிர்வாக தயாரிப்பாளர் பொறுப்பைபாண்டியன் கவனிக்கிறார். படத்தொகுப்பை குணா கவனிக்க, ஹரி எஸ் ஆர் இசை அமைக்கிறார். மக்கள்தொடர்பு பணிகளை நிகில் முருகன் மேற்கொள்கிறார்.
இத்திரைப்படம் குறித்து அறிமுக இயக்குநர் எஸ் ஜே அலெக்ஸ் பாண்டியன் கூறுகையில்: “இது ஒருரொமான்டிக் காமெடியாக, எதிர்பாராத பல திருப்பங்கள் நிறைந்த, உண்மை சம்பவங்களை அடிப்படையாககொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம்,” என்றார். கிராமத்திலிருந்து கல்லூரி படிப்பிற்காக நகரத்திற்குவரும் கதாநாயகன் சந்திக்கும் பிரச்சனைகளே படத்தின் முக்கிய கருவாக உள்ளது என்றும், அழுத்தமான சமூககருத்துக்களை நகைச்சுவையுடன் கூறக்கூடிய படமாக இது இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இத்திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெறும்என்றும் சேதுவுக்கு பின் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் எடுக்கப்படும் படமாக இது இருக்கும் என்றும்படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.