நட்பை பற்றி பேசும் படம் கும்பாரி

விழுகிறாள்.அவள்காதலுக்கு அண்ணன் எதிர்ப்பு தெரிவிக்க காதல் ஜோடி ஊரை விட்டு ஓடஅதன்பிறகுஅவர்களுக்குள் என்ன நடக்கிறது என்பதுதான்கும்பாரிபடத்தின் கதை. படம் பற்றித் தயாரிப்பாளர் குமாரதாஸ் பேசும்போது,”இது ஒரு பயணத்தில் செல்லும் காதல்கதை.சிவகார்த்திகேயன் நடித்தமனம் கொத்திப் பறவைபோல் காதலர்கள் செய்யும் பயணம் தான் இப்படம்.. காதல், நட்பு, நகைச்சுவை, ஆக்சன் என அனைத்தும்  கலந்த முழு நீள எண்டர்டெய்னராக இப்படம் உருவாகிஉள்ளது என்கிறார். கும்பாரி என்றால் குமரி மண்ணின் வட்டார மீனவ மக்கள் வழக்கில் நண்பன் என்று பொருளாம். இந்தப் படம் ஒரு காதல் கதை தான் என்றாலும் நட்பை பற்றியும் இப்படம் பேசுகிறது.********

 

நட்பைப் பற்றி இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் ஒரு நட்பதிகாரமே படைக்கும் வகையில் உள்ளது. குமரி மண்ணின் அழகும், மண்மணம் மணக்கும் மொழியும், பாடல்களும் படத்திற்கு வேறு நிறம்காட்டுகின்றன.இப்படத்தில் காதல், நகைச்சுவை, நட்புடன் கலந்து சமகாலச் சமூகப் போக்கையும்பிரதிபலித்துக் கதை உருவாகியுள்ளது.‘ கும்பாரிபடத்தின் படப்பிடிப்பு கடலும் கடல் சார்ந்த இடங்களான கன்னியாகுமரி, நாகர்கோவில், முட்டம்ஆகிய கடற்கரைப் பகுதிகளிலும் கேரளாவில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும் நடைபெற்றுள்ளது. ஒரேகட்டமாக 30 நாட்களில் படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள் என்பது இவர்களின் திட்டமிடுதலுக்கு ஒருசாட்சியாக விளங்குகிறது. கும்பாரிபடத்தை ராயல் என்டர்பிரைசஸ்  சார்பில்  குமாரதாஸ் தயாரித்துள்ளார்.

கும்பாரிதிரைப்படம் 2024 ஜனவரி 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.. இப்படத்தினை 9V ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது.