முக்குழி பிலிம்ஸ் தயாரிப்பில் ரெனா இயக்கத்தில் விக்னேஷ் – ஆரா நடித்த படம் “குழலி”. திண்டுக்கல் அருகிலுள்ள ஒரு கிராமத்து கதை. வழக்கமாக எடுக்கப்படும் மேல்சாதிப் பெண்ணை கீழ்சாதி பையன் காதலிக்கிறான். இவர்கள் காதலின் முடிவை இயக்குனர் எங்குபோய் நிறுத்துகிறார் என்பதுதான் கதை. கதாநாயகி ஆரா புதுமுக நடிகை என்று சொல்ல முடியாத அளவுக்கு மிகத் திறமையாக நடித்திருக்கிறார். மேல்சாதி கீழ்சாதியில் நடக்கும் ஆணவக் கொலையை இயக்குநர் படத்தில் காட்டியிருக்கின்றாரே தவிர, சமுதாய சீர்திருத்த கருத்தை சொல்லாமல் விட்டுவிட்டது மிகப்பெரிய குறை.*********
தினசரி பத்திரிக்கைகளில் ஒரு செய்தியாக வருகின்ற ஆணவக் கொலையை திரையில் காட்டுவதா சமுதாய சீர்திருத்தம்?. ஆணவக் கொலைகள் நடக்காமலிருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்வதுதான் சமுதாய சீர்திருத்தமாகும். கடிதத்தை வீட்டு முகவரிக்கு கொண்டு கொடுக்கும் தபால்காரர் போல் இயக்குநர் இப்படத்தை கொடுத்திருக்கின்றார்.
இப்படத்தின் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளிச்சியாக இருக்கிறது. கதாநாயகன் விக்னேஷ் அறிமுக நடிகர் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. கிராமத்து இசை இப்படத்திற்கு கூடுதல் பலம்.