“நிறம் மாறும் உலகில்” திரைப்பட விமர்சனம்

எல்.கேத்தரின் மற்றும் லெனின் ஆகியோரது தயாரிப்பில் பிரிட்டோ ஜே.பி.இயக்கத்தில் பாரதிராஜா, துளசி, நட்டி நட்ராஜ், ரியோராஜ், சாண்டி, யோகிபாபு, வடிவுக்கரசி, ஆதிரை, கனிகா, லவ்லின் சந்திரசேகர், ரிஷிகாந்த், ஏகன், விக்னேஷ்காந்த், காவியா அறிவுமணி, அய்ரா கிருஷ்ணன், முல்லை அரசி, மைம் கோபி, விஜி சந்திரசேகர், ஆடுகளம் நரேன், சுரேஷ் மேனன், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் நடித்து வெளிவந்திருக்கும் படம் “நிறம் மாறும் உலகில்”. அம்மாவுடன் சண்டை போட்டுக் கொண்டு லவ்லி சந்திரசேகர் ஒரு ரயலில் பயணிக்கிறார். அந்த ரயிலில் பயணச்சீட்டு பரிசோதகராக வரும் யோகிபாபு லவ்லியின் மனநிலையை புரிந்து கொண்டு அவருக்கு நான்குவிதமான கதைகளை சொல்கிறார். அவர் சொல்லும் நான்கு கதைகளும் அம்மாவின் உறவைப் பற்றியதாகவே இருக்கிறது. அம்மா பாசத்திற்காக ஏங்கும் தாதா, பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்கினாலும் கடைசி காலத்தில் பசியோடு இறக்கும் அம்மா, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அம்மாவை காப்பாற்ற முடியாமல் போகும் மகனின் சோகம், அம்மா என்ற உறவுக்காக எதை வேண்டுமானாலும் தூக்கி எரிய தயாராக இருக்கும் ஆதரவற்ற இளைஞன், என்று நான்கு விதமான கதைகளும், அதில் பயணித்த கதாபாத்திரங்களின் அம்மா மீதான பாசப் போராட்டம் தான் ‘நிறம் மாறும் உலகில்’. படத்தை  சோகத்தின் எல்லை விளிம்புவரை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குநர் பிரிட்டோ. ஒவ்வொருவரின் பின்புலத்தையும் காட்சிப்படுத்தி படம் பார்ப்பவர்களை சலிப்படைய வைத்திருப்பதை தவிர்த்திருக்க வேண்டும். படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரமாகவே உருவெடுத்து நடித்திருக்கிறார்கள். பாரதிராஜா வடிவுக்கரசியின் நடிப்பு தனித்துவமானது. தாதாவாக வரும் நட்டி நட்ராஜ் தனக்கு கொடுத்த வேலையை குறைவின்றி நிறைவேற்றியிருக்கிறார். இசை ரசிக்கும்படி இருக்கிறது. காட்சிப்படுத்திய ஒளிப்பதிவாளரை பாராட்ட வேண்டும்.