அரசுக்கு அறிவுரை கூறும் படம் ‘தமிழ்க்குடிமகன்’

லட்சுமி கிர்யேசன் தயாரிப்பில் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சேரன், லால், ஶ்ரீபிரியன்கா, வேலராமமூர்த்தி, எஸ்.. சந்திரசேகர், ராஷேஷ், ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்தமிழ்க்குடிமகன்‘. சேரன் குடிமகன் குலத்தில் பிறந்தவர். அதனால் கிராமத்திலுள்ள உயர் சாதினர்களின் அழுக்குத்துணிகளை வெளுத்து கொடுப்பது, இறந்தவர்களின் உடலுக்குசடங்கு காரியங்கள் செய்வது போன்ற வேலைககள செய்கிறார். ஆனால் தன்மானமிக்கவராக இருக்கிறார். அந்த ஊரிலுள்ள உயர் சாதியினர் சேரனை அவமானப்படுத்துகிறார்கள். எனவே இனி இறந்தவர்களின்உடலுக்கு சடங்குகள் செய்வதில்லை என்று முடிவெடுத்து பால் வியாபாரம் செய்கிறார். சேரனைஅவமானப்படுத்திய லாலின் தந்தை இறந்து விடுகிறார். அவரது உடலிக்கு சடங்கு செய்ய சேரனைஅழைக்கிறார்கள். அவர் மறுக்கிறார். இந்த பிரச்சினை நீதிமனறம் வரை செல்கிறது. நீதிமன்றம் இதற்கு என்னதீர்ப்பு கூறுகிறது என்பதுதான் கதை. கிராமங்களில் வாழும் தமிழர்களின் வாழ்வியலை படம்பிடித்துகாட்டியிருக்கிறார் இயக்குநர் இசக்கி கார்வண்ணன். தொலைந்து போனகனியான் கூத்துநடனத்தை (ஆண்கள் பெண் வேடமிட்டு காலில் சலங்கை கட்டி ஆடுவது) இப்படத்தில் கண்டு ரசிக்கலாம். கதைக்கேற்றபடி சேரன் கடைசிவரை இறுகிய முகத்துடனே காணப்படுகிறார். நீதிமன்றத்தில் வழக்கறிஞரான எஸ்..சந்திரசேகர், நீதிபதி ராஜேஷிடம் வைக்கின்ற விவாதம் கைத்தட்டவைக்கிறது. நீதிமன்ற விவாதத்தில் அரசியல்வாதிகளின் அரிதார பூச்சு கரைந்து வழிந்தோடுகிறது.