தமிழ் திரையுலகில் திரைப்படத்தை உருவாக்குவதற்கு 24 கிராஃப்ட்டுகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது மரபு. இதுவரை தமிழ் திரையுலகில் ‘அஷ்டவதானி‘, ‘தசாவதானி‘ போன்ற சாதனையாளர்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். முதன்முறையாக திரையுலகின் 24 கிராஃப்ட்டுகளையும் சுயமாக கற்றுக்கொண்டு, ‘பேய் கொட்டு‘ எனும் பேய் படத்தை இயக்கியிருக்கிறார் கின்னஸ் சாதனையாளரான லாவண்யா.*******
இதனுடன் சப்டைட்டில்ஸ், சென்ஸார் ஸ்கிரிப்ட், 5.1 மிக்ஸ், சவுண்ட்இன்ஜினியரிங் உள்ளிட்ட துணை பணிகளையும் மேற்கொண்டு இப்படத்தினை ஒற்றை ஆளாக தோளில்சுமந்து உருவாக்கி இருக்கிறேன். மொத்தம் 31 துறைகளில் இப்படத்திற்காக அயராது உழைத்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் எஸ். லாவண்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேய் கொட்டு‘ எனும் திரைப்படத்தில்லாவண்யா கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் தீபா சங்கர், ஸ்ரீஜா ரவி, சாந்தி ஆனந்தராஜ், பட்டம்மா, ஆடம், சசிகுமார், இலும்பு செல்வம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். லாவண்யா– பி. வசந்த் –ஜான் விக்டர் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். லாவண்யா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கம் மற்றும் படத்தொகுப்பு பணிகளையும் இவரேமேற்கொண்டிருக்கிறார். ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஓம் சாய்புரொடக்ஷன்ஸ் (OM SAI PRODUCTIONS) எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். லாவண்யா(S. Lavanya) தயாரித்திருக்கிறார்.