லெப்டி மனு அல் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஜெகன் விஜயா இயக்கத்தில், வினோத் கிஷன், கௌரிகிஷன், சச்சின், ரோகிணி முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் “பிகினிங்”. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ஒட்டுமொத்த திரையுலகை திரும்பி பார்க்க வைத்ததுடன், ரசிகர்களை பெரும் வியப்பில் ஆழித்தியுள்ளது. ஆசியாவில் முதல்முறையாக ‘ஸ்பிலிட் ஸ்கிரீனில்’ இரண்டுகதைகளை காட்டும் டெக்னிக்கில் இப்படம் உருவாகியுள்ளது.*********
முதல் முறையாக, வித்தியாசமான, புதுமையான அனுபவம் எனும் வார்த்தைகள் தமிழ் சினிமாவில் வழக்கமாகஒவ்வொரு திரைப்படத்திலும் சொல்லப்படும் வார்த்தைகளாகும், ஆனால் இந்த வார்த்தைகளுக்கு உண்மையானஅர்த்தத்தை தந்து, முதல் முறையாக அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது “பிகினிங்” பட டிரெய்லர்.
இப்படத்தில் திரையின் இடது பக்கம் ஒரு கதை விவரிக்கப்படும், வலது பக்கம் மற்றொரு கதை நடைபெறும். ஒரே சமயத்தில் இது நடக்கும். அதே நேரத்தில், பார்வையாளர்கள் குழப்பமடைய மாட்டார்கள். ஒரு டிராமா, ஒருதிரில்லர் முற்றிலும் மாறுபட்ட இரண்டு நிகழ்வுகளை ஒரே நேரத்தில் பார்ப்பது புது வகையான அனுபவமாகஇருக்கும்.
நடிகர்கள்: வினோத் கிஷன் கௌரி G கிஷன் சச்சின் ரோகிணி லகுபரன் மகேந்திரன் சுருளி KPY பாலா தொழில் நுட்ப குழு எழுத்து இயக்கம் : ஜெகன் விஜயா இசை: சுந்தரமூர்த்தி கே.எஸ் ஒளிப்பதிவு : வீரகுமார் எடிட்டர்: CS பிரேம்குமார் கலை : K.V.முருகமணி தயாரிப்பு நிர்வாகி: மாரியப்பன் கணபதி குரல் பதிவாளர்: தீலீபன் இரணியன் ஆடியோகிராபி: டோனி J மிக்சிங் : ப்ளாக் அண்ட் ஒயிட் ஸ்டுடியோ: ஃபயர்பாக்ஸ் ஸ்டுடியோ வண்ணம்: ராஜேஷ் J VFX: முகமது அக்ரம் மக்கள் தொடர்பு : ஜான்சன் தயாரிப்பு: Lefty Manual Creations வெளியீடு: மாஸ்டர்ஃபீஸ் தயாரிப்பாளர்: விஜயா முத்துசாமி இணை தயாரிப்பாளர்: பிரபாகரன் நாகரத்தினம், சுப்ரமணி பிரபாகரன், கோபி அண்ணா, பொன்னி பிரபு, அன்பரசி பாபு.