சுயநலத்தை வைத்துக்கொண்டு ஒரு எதிர்பார்ப்புடன் தன்னுடைய கடமையை செய்கிறான் மனிதன் – லியோ பால் சி.லாறி

இன்றைக்கு நமக்கு ஒரு மகிழ்ச்சியான நாளாக இருக்கிறது. இந்நேரத்தில் மேடையில் வீற்றிருக்கும் எல்லா பெரியவர்களுக்கும் இந்நேரத்தில் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இன்றைக்கு நாம் 55-வது கல்கி ஜெயந்தி விழாவைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். உங்கள் எல்லாருக்கும் 55-வது கல்கி ஜெயந்தி விழா வாழ்த்துதல்களையும் தொவித்துக்கொள்கிறேன். இன்றைக்கு இந்த சர்வ சமய மாநாட்டில் இரண்டு புஸ்தகங்கள் வெளியீடு காண்கிறது. ஆகவே இன்றைக்கு புஸ்தகம் படிக்ககூடிய பழக்கம் என்பது மக்களுடைய மத்தியில் குறைந்து வருகிறதை நாம் காணமுடிகிறது. இன்றைக்கு இருக்ககூடிய இளைய சமூகத்தினர் அநேக நல்ல புஸ்தகங்களை அவர்கள் படித்தால் தான் அநேக நல்ல காரியங்களை தெரிந்துகொள்ள முடியும் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். அதேபோல் இந்த புஸ்தகங்களை வெளியிடுவதின் நோக்கம் என்னவென்றால் இன்றைக்கு அவசர காலகட்டத்தில் மக்கள் ஒரு இயந்திர வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கிறதை நாம் காணமுடிகிறது. அதனால் ஒருவருக்கொருவார் விட்டுக்கொடுத்து செல்லக்கூடிய ஒரு மனப்பான்மை என்பது இல்லாமல் போய் விடுகிறது. அநேகார் சண்டைபோட்டுக் கொண்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறது. அதற்கு காரணம் என்னவென்றால் இன்றைக்கு இந்த அவசர வாழ்க்கையில் பொறுமை என்பதை மனிதன் இழந்துகொண்டே வருகிறான் என்பதை நாம் காணமுடிகிறது. இன்றைக்கு நம்மை நாம் ஆன்மீகத்தில் ஈடுபடுத்திக் கொள்ளும்போது கடவுளைக் குறித்த ஒரு பயம் என்பது நமக்கு வரும்போது, நாம் அநேக காரியங்களை இந்த உலகத்தில் நாம் புரிந்துக்கொள்ள முடியும் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். பக்தி என்பது குறைந்துக்கொண்டே வருகிறதை நாம் பார்க்க முடிகிறது. ஆகவே இன்றைக்கு அப்படிப்பட்ட காரியங்களை மக்களுக்கு இலவசமாக நாம் தெரியப்படுத்த வேண்டும் என்பற்காக இப்படிப்பட்ட ஆன்மீக காரியங்களை மனுஜோதி ஆசிரமத்தின் சார்பாக எல்லா இடங்களில் நாம் எடுத்துக் கொண்டு சென்று கொண்டிருக்கிறோம். ஆகவே இந்த புஸ்தகங்களை நீங்கள் வாசித்துப் பார்ப்பீர்கள் என்றால் ஒரு மனிதன் எவ்வாறு வாழவேண்டும் என்ற அறிவுரைகள் அதில் அநேகமாக இருக்கிறது.
ஆகவே முதலாவது “THE SKILL OF HIS LOVING HANDS” என்ற புஸ்தகத்தை, இப்பொழுது இந்த 55-வது கல்கி ஜெயந்தி விழாவில் அந்த புஸ்தகமானது இன்றைக்கு வெளியிடப்படுவது மிகவும் ஒரு மகிழ்ச்சியான காரியமாக இருக்கிறது. இந்த புஸ்தகத்தை ஸ்ரீ லஹரி கிருஷ்ணா   அவர்கள் எடுத்து வைத்திருந்த காரியத்தை அதை என்னுடைய தந்தையார் தொகுத்து வைத்திருந்ததை என்னுடைய சகோதரி கனுகா அதை எடுத்து அதில் அநேக இலக்கண திருத்தம் போன்ற காரியங்களை எல்லாம் அவர்கள் பார்த்தார்கள். அதற்கு முக்கியமாக ப்ளாரி ஆன்ட்டி அவர்கள் அதில் உதவி செய்திருக்கிறார்கள். சகோதரி ப்ளாரி அதேபோல் சகோ. வினோத் குமார் அவர்கள் இதற்கு அநேக உதவியை செய்திருக்கிறார். மலேசியாவைச் சோர்ந்த சகோ. சைமன் மாரிமுத்து அவார்கள் இதற்கு உதவி 
செய்திருக்கிறார்கள். இன்னும் அநேகர் சகோ. பிரசாத், சகோ. ஜெய்பிரகாஷ், டால்டன். சகோ. பெரில் இன்னும் அநேகர் அதற்கு உதவி செய்திருக்கிறார்கள். சகோ. தேவ இந்திரன், சகோதரி ஹவிலா போன்றவர்கள் இந்த புஸ்தகத்தை இன்றைக்கு வெளியீடு செய்வதற்கு உதவி செய்திருக்கிறார்கள். அதேபோல் இந்த புஸ்தகத்தை வெளியிடுவதற்கு இத்தனை பெரியவர்கள் வந்து இன்றைக்கு இந்த விழாவினை சிறப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் நமக்கு ஒரு மகிழ்சியான காரியமாக இருக்கிறது.  அதேபோல் “புதிய தேவ கீதை” ராகம்-3” என்ற புஸ்தகத்தை வெளியிட உள்ளோம். இது 1999-ம் வருடம் மற்றும் 2000-ம் வருடங்களில் என்னுடைய தந்தையால் அது தொகுக்கப்பட்டது. அதை அநேக ராகங்களாக வெளியிட வேண்டும் என்று என்னுடைய தந்தை முயற்சி செய்தார்கள். அப்பொழுது இன்றைக்கு இருக்ககூடிய அளவிற்கு கம்யூட்டர்  டெக்னாலஜியோ எந்த ஒரு காரியமோ நமக்கு கிடையாது. அதில் அநேக கவிதைகள் இருக்கிறது. அநேக சிறு சிறு கதைகள் அதில் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு மனிதன் எப்படிப்பட்ட ஒரு ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்பதைக் குறித்த கதைகளாக அதில் சொல்லப்பட்டிருக்கிறது.

கடவுள் மேல் சார்ந்து எப்படி ஒரு வாழ்க்கை வாழ  வேண்டும் என்பதைக் குறித்து அதில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே அப்படிப்பட்ட காரியங்களை நாம் பார்த்து அதன்படி நாம் வாழும்பொழுது அந்த கடவுளை நாம் பரிபூரணமாக  தெரிந்துக்கொண்டு அவருடன் நாம் ஐக்கியப்பட முடியும் என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். ஆகவே கடவுளால் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு சிருஷ்டியும் தன் தன் கடமையை சரியாக இலவசமாக பலனை எதிர்பார்க்காமல் செய்துகொண்டிருக்கிறது. மனிதன் ஒருவன் தான் என்ன செய்துகொண்டிருக்கிறான்? சுயநலத்தை வைத்துக்கொண்டு ஒரு எதிர்பார்ப்புடன் தன்னுடைய கடமையை செய்கிறான். ஆகவே நாம் இன்றைக்கு பகவத் கீதையை படிக்கிறோம் பைபிளைப் படிக்கிறோம் குரானை படிக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளுவதல்ல. அதன்படி நம்முடைய வாழ்க்கையில் செயல்படுத்துகிறோமா என்பதை தான் இந்த மனுஜோதி ஆசிரமமானது சொல்லிக் கொடுக்கிறது. ஆகவே அதை படிப்பது மட்டுமல்லாமல் நம்முடைய வாழ்க்கையில் அதை செயல்படுத்த வேண்டும் என்பதை இன்றைக்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மகிழ்ச்சியான நேரத்தில் இந்த இரண்டு புஸ்தகங்களை வெளியிடுவதை நாங்கள் சந்தோஷமாக தெரிவித்துக்கொள்கிறோம். அதேபோல் மேடையில் வீற்றிருக்கும் எல்லா பெரியவர்களுக்கும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா  அவர்களுடைய நாமத்தில் என்னுடைய வாழ்த்துதல்களையும்  நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன். இப்பொழுது நாம் அந்த புஸ்தக வெளியீடு விழாவை துவங்குவோம்.