சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர், காவல் கரங்கள் சார்பில் விழிப்புணர்வு நடை பேரணியை துவக்கி வைத்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்

சென்னை பெருநகரில் சுற்றித்திரியும், ஆதரவற்றோர், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், பெண்கள் மற்றும் குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக சென்னை பெருநகரகாவல்துறை சார்பில் 21.04.2021 அன்று தொடங்கப்பட்ட ‘‘காவல் கரங்கள்‘ மூலம் சென்னையில சுற்றித்திரிந்த தமிழகம் மற்றும் வடமாநிலத்தைச் சேர்ந்த ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், முதியோர், பெண்கள் மற்றும் குழந்தைகள் தன்னார்வலர்களுடன் ஒருங்கிணைந்து மீட்கப்பட்டு, அவர்களது உறவினர்கள் மற்றும் ஆதரவு இல்லங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், மீட்கப்பட்டவடமாநிலத்தவர்கள் இரயில் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, இன்று (01.05.2022) காலை, பெசன்ட்நகர் கடற்கரை அருகில் காவல்கரங்கள் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நடை பேரணியை (Awareness Walking Rally) சென்னைபெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) முனைவர் ஜெ.லோகநாதன், இ.கா.ப., கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மேலும், சுமார் 5 கி.மீ. துரம் நடைபெற்ற இந்நடை பேரணியின்போது, கூடுதல் ஆணையாளர்அவர்கள் காவல் கரங்கள் சார்பில் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து தயாரிக்கப்பட்டவிழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இப்பேரணியில், காவல் கரங்கள்அமைப்பைச் சேர்ந்த காவல் ஆளிநர்கள், தன்னார்வலர்கள், கல்லுரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள்என சுமார் 300 நபர்கள் கலந்து கொண்டனர்.