கனடாவில் வாழ்ந்து வரும் தமிழ் பேசும் மூத்தோரில் பாடும் திறமையுள்ளவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கி அவர்களிலிருந்து தெரிவு செய்யப்பெறும் வெற்றியாளர்களுக்கு பெறுமதி வாய்ந்த பரிசுகளை வழங்கும் விழாவை அதன் ஏற்பாட்டாளர் ‘விலா கருணா மூத்தோர் பராமரிப்பு இல்லம்’ நிறுவனர் இந்திராணி நாகேந்திரம் அவர்கள் நடத்திவருகின்றார். தொடர்ச்சியாக வருடாந்தம் நடைபெற்று வரும் இந்த ‘சந்தியாராகம்’ பாடல் போட்டி நிகழ்ச்சின் இவ்வருடத்தின் வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்கும் இறுதிப் போட்டி கடந்த 28-09-2024 ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்காபுறோ நகரில் சிறப்பாக நடைபெற்றது. காலை 19.00 மணி தொடக்கம் நடைபெற்ற இந்த போட்டி நிகழ்ச்சியின் இறுதித் தேர்வில் பல பார்வையாளர்கள் மற்றும் இசைக் கலைஞர் அத்துடன் வர்த்தகப் பெருமக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் மண்டபத்தை நிறைத்த இருந்தார்கள்.
இசைக் கலைஞர் ஜெரோம் தலைமையிலான இசைக் குழுவினர் பின்னணி இசையை வழங்கினர். போட்டியின் இறுதித் தேர்விற்கான நடுவர்களாக கனடாவில் புகழ்பெற்ற பாடக பாடகிகள் பணியாற்றினார்கள். இறுதியில் இவ்வருடத்தின் சந்தியாராகம்’ பாடல் போட்டியின் முதலாவது வெற்றியாளராக பாடகர் சங்கர் கிருஸ்ணன் அவர்களும், இரண்டாவது வெற்றியாளராக பாடகி ராஜி விமல் அவர்களும் மூன்றாவது வெற்றியாளராக கார்த்திகேசு உதயகுமார் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். மேற்படி சந்தியாராகம்’ பாடல் போட்டி நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்கிய வர்த்தக நிறுவனங்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் விழா ஏற்பாட்டாளர் இந்திராணி நாகேந்திரம் அவர்கள் நன்றி தெரிவித்து சான்றிதழ்களையும் வழங்கினார்.