“உதயன்” வார இதழை கேட்டுப் பெற்று பாராட்டிய கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ

17-01-2025 வெள்ளிக்கிழமையன்று மாலை கனடாஶ்ரீ றிச்மண்ட் விநாயகர் ஆலயத்திற்கு விஜயம் செய்த கனடாவின் சிறந்த பிரதமர்களில் ஒருவரான ஜஸ்ரின் ட்ரூடோ அவர்கள் அ ங்கு நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு கனடாவின் பல்கலாச்சாரக் கொள்கை மற்றும் கோட்பாடுகள் அனைத்தையும் காப்பாற்றும் வகையில் ஏனைய இனங்களோடு இணைந்து இந்த அற்புதமான தேசத்திற்காக உழைப்பதற்காக நன்றியையும் தெரிவித்தார்.

அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி அவர்களின் அழைப்பை ஏற்று அங்கு சென்றிருந்த கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அவர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிரதமர் ஒட்டாவா ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகளை முன்பக்கத்தில் தலைப்புச் செய்தியாக பிரசுரித்த உதயன் இதழை அவரிடம் காட்டி அதன் சாரம்சத்தை அவரிடம் விளக்கிய போது. பிரதமர் அவர்கள் அதை மகிழ்ச்சியுடன் பத்திரிகைப் பிரதியை தன்னிடம் தரும் படி கேட்டு அதன் முன் பகத்தில் அவர் பற்றிய செய்தியில் எமக்கு மிகவும் அரிதாகக் கிட்டக்கூடிய வாய்ப்பாக தனது கையெழுத்தையும் இட்டுத் தந்தார். இது பத்திரமாக பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று என்று அங்கு பிரதம ஆசிரியரைச் சந்தித்தநண்பர்கள் பலர் அழுத்திச் சொல்லிச் சென்றார்கள்.