கனடாவில் மறைந்த ‘கெப்டன்’ விஜயகாந்த்’ அவர்களின் மறைவிற்கு மரியாதை செலுத்தும் முகமாக நடத்தப்பெற்ற அஞ்சலி நிகழ்வு

கனடாவில் மறைந்தகெப்டன்விஜயகாந்த்அவர்களின் மறைவிற்கு மரியாதை செலுத்தும் முகமாக  கடந்த13-01-2024 அன்று சனிக்கிழமை நடத்தப்பெற்ற அஞ்சலி நிகழ்வு மக்கள் மனங்களிற்கு நிறைவைத்தந்துள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்கனடா உதயன்ஆசிரிய பீடத்திற்கு அனுப்பி வைத்துள்ளநன்றிதெரிவிக்கும்குறிப்பில் தெரிவித்துள்ளார்கள்.

கனடாஸ்காபுறோ நகரில் ஆரோசை இசைக்குழு மற்றும் ஆரபி புரடக்‌ஷன் இணை ஏற்பாட்டில் நடைபெற்றகப்டன்விஜயகாந்த் அவர்களுக்கான மரியாதை செலுத்தும் அஞ்சலி நிகழ்வு இனிதான பாடல்களோடும்மனதை நெகிழ வைக்கும் உரைகளோடும் அனைத்தும் அடங்கிய அடக்கமான விழாவாக நிறைவுற்றது. இந்தநிகழ்வு கனடா பைரவி நுண்கலைக் கூடத்தின் கலா மண்டபத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

  விழாவிற்கு  பைரவி நுண்கலைக் கூடத்தின் அதிபரும்ஆரோசைஇசைக்குழுவின் நிறுவனருமான திருஜெயச்சந்திரன் தியாகராஜா தலைமை வகித்தார்.அங்கு கவிஞர் சயந்தன் அவர்கள் இறுக்கமான அஞ்சலிக் கவிதை ஒன்றை வாசித்தளித்தார். அஞ்சலிஉரைகளை டாக்டர் போல் ஜோசப்.’உதயன்லோகேந்திரலிங்கம் உட்பட சிலர் ஆற்றினார்கள்பிரபலதொலைக்காட்சி வானொலி அறிவிப்பாளரும் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான பிரசாந்த் அவர்கள் தொகுத்துவழங்கினார்.

அங்குஆரோசைஇசைக் குழுவினரால் அஞ்சலி நிகழ்வில் சேர்க்கப்பட்ட பாடல்கள் அனைத்தும் மிகுந்தஉருக்கத்தை ஏற்படுத்துபவையாக விளங்கின. அஞ்சலி நிகழ்விற்கு அழைக்கப்பட்டவர்கள் அனைவரும்இறுதிவரை இருந்துஅமரர் கெப்டன்அவர்ளுக்கு மரியாதை செலுத்தி மலர் அஞ்சலியும் செய்தனர்.