கனடிய பெண்கள் கழகமும் ,ஈற்றோபிக்கோ தமிழ் மூத்தோர் அமைப்பும் இணைந்து கொண்டாடிய ‘சர்வதேச பெண்கள் தினம்-2024.

கடந்த பல வருடங்களாக கனடாவில் இயங்கிவரும். கனடிய பெண்கள் கழகமும் ,ஈற்றோபிக்கோ தமிழ்மூத்தோர் அமைப்பும் இணைந்து கொண்டாடியசர்வதேச பெண்கள் தினம்-2024. கடந்த சனிக்கிழமை 30-03-2024 அன்று ஈற்றோபிக்கோ நகரில் அமைந்துள்ள கிப்ளிங்க வடக்கும் சன சமூக நிலைய மண்டபத்தில்சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு அமைப்புக்களின் தலைவி ரோகிணி கருன அவர்கள் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாகஒன்றாரியோ முதல்வர் டக்போர்ட் அவர்களின் தொகுதி அலுவலகத்தின் முகாமையாளர் மிசல் அவர்களும்கனடாஉ தயன்லோகேந்திரலிங்கம் அவர்களும் அழைக்கப் பெற்றிருந்தார்கள்.  பெண்மணிகள் வழங்கிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் திறன் காணும் நிகழ்ச்சிகள் பெண்மணிகளுக்காக இடம்பெற்றன.

அத்துடன் கௌரவிப்பு. பாராட்டுரைகள் ஆகியனவும் இடம்பெற்றன. குறிப்பாக உடல் நலம் பற்றிய சிறப்பானவிளக்கவுரைகளும் அனுபவம் மிக்க யோகாசனப் பயிற்சி ஆசிரியையினால் நிகழ்த்தப்பட்டன.

தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் முன்னாள் தலைவர் திரு குணநாதன் உட்பட பலர் அங்குகௌரவிக்கப்பட்டார்கள். இசையாசிரியை திருமதி லசந்தி ராஜ்குமார் தனது புதல்வி சகிதம் கர்நாடக இசைநிகழ்ச்சி வழங்கினார்கள். மிருதங்கக் கலைஞர் நரேந்திரா அவர்கள் பக்கவாத்திய இசை வழங்கினார்.

மொத்தத்தில் பெண்மணிகள் பலரும் ஆர்வமுள்ள ஆண்கள் பலரும் கலந்து மகிழ்ந்து கொண்டாடிய சர்வதேசப்பெண்கள் தின விழாவாக அன்றைய நிகழ்ச்சி அமைந்தது.